ஆட்டின் முதுகு மேல் ராஜா போல கெத்தாக சவாரி செய்யும் நாய்..வைரல் வீடியோ

Viral Video : ஒரு நாய், ஆட்டின் முதுகு மீது ஏறி, அதற்கு தலைவன் போல சவாரி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Oct 8, 2024, 06:33 PM IST
  • ஆடு மீது சவாரி செய்யும் நாய்
  • கெத்தாக பார்க்கும் வீடியோ..
  • ஆடும்-நாயும் நண்பர்களாக இருக்குமா?
ஆட்டின் முதுகு மேல் ராஜா போல கெத்தாக சவாரி செய்யும் நாய்..வைரல் வீடியோ title=

Viral Video : மணிக்கணக்காக நாம் இணையத்தில் நேரத்தை செலவழித்தாலும், அதிலிருந்து ஏதேனும் ஓரிரண்டு விஷயங்களையாவது தெரிந்து கொள்கிறோம். தற்போதைய டிஜிட்டல் உலகில், பலரும் தாங்கள் பயணம் செய்யும் நேரம், உறங்க செல்வதற்கு முன்பு, சாப்பிடும் போது என அனைத்து நேரங்களிலும் செல்போனை கையில் வைத்துக்கொண்டே இருக்கிறோம். கையடக்கமாக, இவ்வளவு சிறியதாக இருக்கும் இந்த டிவைஸில் உலகின் மூலை முடுக்குகளில் நடக்கும் விஷயங்களில் இருந்து, பெரிதாக நடக்கும் உலக நிகழ்வுகள் வரை அனைத்தும் நமக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. 

இந்த செல்போன் பயன்பாட்டால் பல சமயங்களில் பிரச்சனை ஏற்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் அதுவே பலருக்கு பொழுது போக்காக இருக்கிறது. இதில், நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வீடியோக்களும் வருகின்றன, மனதை பதைபதைக்க வைக்கும் கொடூர வீடியோக்களும் வருகின்றன. நம்மை ஆச்சரியப்படுத்தும் வீடியோக்களில் ஒன்றாக இருக்கிறது விலங்குகள் புத்திசாலித்தனமாக செய்யும் சேட்டை வீடியோ. அப்படிப்பட்ட க்ளிப்பிங் ஒன்றுதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

வைரல் வீடியோ:

தற்போது வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஆடுகள் அனைத்தும் மந்தை மந்தையாக சென்று கொண்டிருக்கின்றன. அதற்கு இடையில், ஒரே ஒரு நாய் மட்டும் ஆட்டின் முதுகு மீது ஏறி ஒய்யாரமாக அமர்ந்து கொண்டு சவாரி செய்து கொண்டிருக்கிறது. 

அந்த நாய், என்னவோ ஆட்டின் கூட்டத்திற்கே நான்தான் தலைவன் என்பது போல, ஆட்டின் மீது சவாரி செய்கிறது. இதனாலேயே, வெறும் 15 வினாடிகள் வரை இருக்கும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நாயும் ஆடும் நண்பர்களாக இருக்குமா? 

நாயும் ஆடும் பல சமயங்களில் தோழமை பாராட்டும் விலங்குகளாக இருக்குமாம். இவை, எந்த சமயத்தில் சந்தித்து கொள்கின்றன, எப்படி வளர்க்கப்பட்டிருக்கின்றன என்பதை பொறுத்து இதன் நட்பும் அமையுமாம். இவை இரண்டுமே வீட்டு விலங்குகள் என்பதாலும், மனிதர்களுடன் ஒட்டி வாழும் விலங்குகள் என்பதாலும் இரண்டுக்கும் சீக்கிரமே ராசியாகிவிடுமாம்.

மேலும் படிக்க | மணமேடையில் லேப்டாப்புடன் மணமகள், கடுப்பான மணமகன்: இணையத்தை தெறிக்கவிட்ட வைரல் வீடியோ

மேலும் படிக்க | முயலை உயிரோடு முழுங்கும் கடல் புறா வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News