Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

மானை முழுவதுமாக மலைப்பாம்பு விழுங்கியவுடன், அங்கிருந்து வேகமாக சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 18, 2021, 12:15 AM IST
  • முழு மானையும் விழுங்கும் மலைப்பாம்பின் இந்த வீடியோ மிகவும் அரிதானது.
  • 34-வினாடி காணொளியில் 8 அடி பாம்பு.
  • இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
Viral Video: முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ title=

வைரல் வீடியோ: ராஜஸ்தானின் பரான் மாவட்டத்தில் இருந்து ஒரு மலைப்பாம்பு மானை உயிருடன் விழுங்கும் அதிர்ச்சி வீடியோ வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை காலை கிஷன்கஞ்ச் வனப்பகுதியில் நடந்துள்ளது. லாலாபுரா தோட்டத்திலுள்ள ஒரு மலைப்பாம்பால் மான்களை வேட்டையாடிய போது இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. 34-வினாடி காணொளியில் 8 அடி பாம்பு முழு மானையும் வாயில் வைத்து மெதுமெதுவாக விழுங்குவதைப் பார்க்க முடிகிறது.

மலைப்பாம்பு மானை முழுவதுமாக விழுங்கியவுடன். அங்கிருந்து வேகமாக மலைப்பாம்பு சென்றதாக கிராம மக்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தின் போது, ​​வனத்துறையின் சில அதிகாரிகள் இங்கு இருந்தனர், அவர்கள் இந்த சம்பவத்தை தங்கள் மொபைல் கேமராவில் பதிவு செய்தனர்.

வீடியோ பார்க்க:

கிஷன்கஞ்ச் அருகே ஒரு அடர்ந்த காடு உள்ளது. காட்டு விலங்குகள் இங்கு அடிக்கடி வருவது வழக்கம். பரான் மாவட்டத்தின் இந்த அடர்ந்த காட்டில் மான், மலைப்பாம்பு, கரடி உள்ளிட்ட காட்டு விலங்குகள் வாழ்கின்றன.

ALSO READ | Viral Video: சீறிப் பாயும் நாகப் பாம்பை தண்ணீர் கேனில் அடைத்த மந்திரவாதி..!!

முயல்கள் அல்லது எலிகள் போன்ற சிறிய விலங்குகளை பாம்புகள் (Sakes) விழுங்கும் வீடியோக்கள் நாம் அதிகமாக பார்த்திருப்போம். அதுபோன்ற வீடியோக்களை மிகவும் சாதாரணமாக கடந்து நான் செல்கிறோம். ஆனால் முழு மானையும் விழுங்கும் மலைப்பாம்பின் இந்த வீடியோ மிகவும் அரிதானது. இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ (Viral Video) தற்போது வைரலாகி வருகிறது.

ALSO READ | Viral Video: நடுங்க வைக்கும் வீடியோ; இதயம் பலவீனமானவர்கள் பார்க்காதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News