குறைவான கட்டணத்தில் தினம் 2 ஜிபி டேட்டா உடன் OTT பயன்கள்... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ

அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவை விட்டுச் செல்வதைத் தவிர்க்க, ஜியோ அவ்வப்போது சில புதிய மலிவான திட்டங்களை கொண்டு வருகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2024, 03:19 PM IST
  • ஜியோ அவ்வப்போது சில புதிய மலிவான திட்டங்களை கொண்டு வருகிறது.
  • தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்.
  • புதிய திட்டம் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்புவோருக்கு உதவக்கூடும்.
குறைவான கட்டணத்தில் தினம் 2 ஜிபி டேட்டா உடன் OTT பயன்கள்... அசத்தும் ரிலையன்ஸ் ஜியோ title=

தொலைத் தொடர்புத் துறையின் முக்கிய தனியார் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் ஜூலை 3 முதல் தங்கள் ரீசார்ஜ் திட்டங்களை அதிகரித்துள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை சுமார் 15% அதிகரித்தன. இதனால், அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் BSNL பக்கம் பார்வையை திருப்பினர்.

அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் ரிலையன்ஸ் ஜியோவை விட்டுச் செல்வதைத் தவிர்க்க, ஜியோ அவ்வப்போது சில புதிய மலிவான திட்டங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில், ஜியோ ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, அதில் உங்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் வரம்பற்ற அழைப்பு வசதி கிடைக்கும்.  இந்த திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது என்பதோடு, இத திட்டத்தில் உங்களுக்கு ஒரு நாளைக்கு சுமார் ரூ.10 மட்டும் தான் செலவாகும். இந்த திட்டம் குறித்து விபரமாக அறிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 999 ரீசார்ஜ் திட்டம்

ரூ 999 பெறும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். இதில்  100 இலவச எஸ்எம்எஸ் வசதியும் கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால் வசதியும் உண்டு. அதோடு மிக முக்கியமாக இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவும் (Mobile Data) கிடைக்கும். இது தவிர, நீங்கள் இலவச 5G இணைய வசதியும் கிடைக்கும். கூடுதலாக, நீங்கள் இலவச Jio TV, Jio Cloud மற்றும் Jio Cinema ஆகியவற்றைப் பெறுவீர்கள்.

ரிலையன்ஸ் புதிய திட்டம் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை விரும்புவோருக்கு உதவக்கூடும். என்னும், OTT இயங்குதளங்களுக்கான அணுகலை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டத்தை பெற விரும்புபவர்களுக்கு ரூ.1,049 மற்றும் ரூ.1,299 ஆகிய கட்டணங்களின் கிடைக்கும் பிளான்கள் சிறந்த தேர்வாக இருக்கும்

ரூ.1,049 மற்றும் ரூ.1,299 ஆகிய இரண்டு திட்டங்களும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இவை அன்லிமிடெட் கால் வசதி மற்றும்  தினம் 2 ஜிபி டேட்டாவை வழங்குகின்றன. ரூ.1,049 திட்டத்தில் Sony Liv மற்றும் Zee5 ஆகியவற்றுக்கான இலவச சந்தா கிடைக்கும். ரூ.1,299 Sony Liv மற்றும் Zee5 ஆகியவற்றுடன் இலவச Netflix மொபைல் இலவச சந்தாவும் அடங்கும்.

மேலும் படிக்க | ஏர்டெல் வழங்கும் மலிவான டேட்டா பேக்... 7 ரூபாயில் 1GB... பயனர்கள் ஹேப்பி

ஜியோவின் ரூ.175 திட்டம்  (Jio Rs 175 Plan)

Sony Liv, Zee5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, Sun NXT மற்றும் JioTV போன்ற OTT இயங்குதளங்களின் 28 நாட்களுக்கான சந்தாவுட்டன் 10ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் ரூ.175 திட்டத்தையும் நீங்கள் வாங்கலாம்.

ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் தினசரி டேட்டாவுடன் வருகின்றன. இருப்பினும், வீட்டிலிருந்து அலுவலகப் பணிகளைச் செய்பவர்களுக்கும், ஆன்லைனில் படிக்கும் பயனர்களுக்கும் அதிக மொபைல் டேட்டா (Mobile Data) தேவைப்படுகிறது. அத்தகைய பயனர்களுக்கு நிறுவனம் டேட்டா ஒன்லி பேக்கையும் வழங்குகிறது.

ஜியோ டேட்டா பேக் (Jio Data Only Pack)

ஜியோவின் இந்த திட்டத்தில், பயனர்கள் 1 நாள் முதல் இரு மாத கால வேலிடிட்டி கொண்ட அதிவேக டேட்டா கிடைக்கும்.. வரம்பற்ற டேட்டாவைப் பெறுகிறார்கள். இதில் 25ஜிபி முதல் 50ஜிபி வரையிலான  அதிவேக டேட்டா வசதி  கிடைக்கும்.

மேலும் படிக்க | BSNL 5G... 5ஜி நெட்வொர்க் சோதனையை தொடங்கிய பிஎஸ்என்எல் ... கலக்கத்தில் ஜியோ, ஏர்டெல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News