Viral Video: பச்சக்கிளி... பியூட்டிஃபுலி! இணையத்தைக் கலக்கும் கியூட் பச்சைக்கிளி!

பச்சைக்கிளிகள் பறப்பதும், அவற்றின் சிவப்பு மூக்கை வைத்துக்கொண்டு பழங்களைக் கொத்தித் தின்பதும் தனி அழகுதான். அப்படிப்பட்ட ஒரு பச்சைக்கிளி ஒன்று இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 6, 2021, 10:33 AM IST
Viral Video: பச்சக்கிளி... பியூட்டிஃபுலி! இணையத்தைக் கலக்கும் கியூட் பச்சைக்கிளி! title=

Viral Video: 'பச்சக்கிளி....’ அண்ணாத்த படத்தில் சூப்பர் ஸ்டார் சொல்லக் கேட்டு அனைவருக்கும் பரிச்சயமாகிவிட்டது ‘பச்சக்கிளி..’ என்ற சொல். எனினுன், இந்த படம் வருவதற்கு முன்னரும், பச்சைக்கிளி என்றாலே, அழகு, ஆனந்தம், அற்புதத்துக்கான ஒரு பறவைதான்.

பச்சைக்கிளிகள் (Parrot) பறப்பதும், அவற்றின் சிவப்பு மூக்கை வைத்துக்கொண்டு பழங்களைக் கொத்தித் தின்பதும் தனி அழகுதான். அப்படிப்பட்ட ஒரு பச்சைக்கிளி ஒன்று இப்போது இணையத்தை கலக்கி வருகிறது.

பச்சைக் கிளி ஒன்று டிராஃபிக் கேமராவில் போட்டோபோம் (Photo Bomb) போடுவதை இந்த வேடிக்கையான வீடியோவில் காண முடிகின்றது. ஒரு விஷயத்தின் மீது வீடியோவின் கவனம் இருக்கும்போது சம்பந்தமே இல்லாத மற்றொரு விஷயம் அந்த வீடியோவில் தானாக வந்து முக்கியத்துவம் பெறும்போது, அது போட்டோபாம் எனப்படுகிறது.

இந்த பச்சைக்கிளியின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி (Viral Video) வருகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் ‘காஸ்ஸி’ என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இது இதுவரை 1,300க்கும் மேற்பட்ட வியூஸ்களைப் பெற்றுள்ளது.

பிரேசிலில் சாலையின் போக்குவரத்தை கண்காணிக்க உயரத்தில் வைக்கப்பட்டிருந்த கேமராவில் கிளியின் கியூட்டான அட்டூழியங்கள் படமாக்கப்பட்டுள்ளன. 13 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில், கிளி ஒன்று தலைகீழாக கேமராவில் எட்டிப் பார்ப்பதைக் காண முடிந்தது. ஒரு கணம் இந்த வீடியோவில் போக்குவரத்தைக் காண முடிகின்றது. அடுத்த நிமிடமே, திடீரென ஒரு கிளியின் முகம் காணப்படுவதைப் பார்த்து அனைவருக்கும் அதிர்ச்சியாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது.

ALSO READ: முத்தம் இனிக்குமா? கசக்குமா? பாம்பை முத்தமிடும் பெண்ணிடம் கேட்கலாமா?

இந்த வீடியோவின் (Video) வேடிக்கையான பகுதி என்னவென்றால், அந்த கிளி, அதன் பெரிய கண்களுடன் கேமராவிற்குள் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கிறது. இதை கிளியின் முகபாவத்தின் மூலம், இதை தெரிந்துகொள்ள முடிகின்றது. மீண்டும் மீண்டும் அந்த கிளி கேமரா லென்சின் முன் தன் முகத்தைக் காட்டுகிறது.

இந்த வேடிக்கையான வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by kassy cho (@kassy)

நெட்டிசன்கள் இந்த வீடியோவை மிகவும் மகிழ்ச்சியுடன் கண்டு வருகிறார்கள். கிளியின் கியூட்டான செயல்களும் கேமராவுக்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள அது காட்டும் ஆர்வமும் நெட்டிசன்களைக் கவர்ந்து வருகிறது. 

ALSO READ:இந்த ஐடியா நமக்கு தெரியாம போச்சே! தந்தை செய்த காரியம் -பார்க்க வீடியோ 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News