என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்... இணையத்தை கலக்கும் நாய்-பூனை!

எப்போதும் சண்டைபோட்டுக்கொள்ளும் நாயும் பூனையும், இப்போது நண்பர்களாக மாறி பாசமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Oct 3, 2022, 08:06 AM IST
  • நண்பர்களாக இணைந்து இருக்கும் பூனை, நாய்.
  • ஒரே இடத்தில் ஒன்றாக தூங்குகிறது.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்... இணையத்தை கலக்கும் நாய்-பூனை! title=

பெரும்பாலான வீடியோக்களில் நாம் பூனையும், நாயும் ஒன்றுக்கொன்று சண்டைபோட்டுக்கொண்டு கட்டிபுரளும் காட்சியை தான் பார்த்திருப்போம்.  ஆனால் சமீப காலமாகவே நாயும், பூனையும் சண்டைபோட்டுக்கொண்டாலும் அதிகமாக ஒன்றுக்கொன்று பாசமாக நட்பு பாராட்டும் வீடியோக்கள் தான் இணையத்தில் வட்டமடித்து வருகின்றது.  இதுபோன்று விலங்குகள் தங்களோடு மற்ற இன விலங்குகளையும் இணைத்து கொள்வது பார்ப்பதற்கு அழகாகவும் மனதிற்கு இதமளிப்பதாகவும் இருக்கிறது.   மற்ற விலங்குகள் செய்யும் குறும்புகளை காட்டிலும் நாய் மற்றும் பூனை ஆகிய இரண்டு வளர்ப்பு பிராணிகளும் செய்யும் செயல்கள் அனைத்தும் விரைவில் கவன ஈர்ப்பை பெற்றுவிடுகின்றன.  இதுவரை நாய்-பூனை சண்டை காட்சிகளை அதிகம் கண்டு ரசித்த நமக்கு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நாய்-பூனையின் பாசம் கலந்த நட்பு வீடியோ ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் சேர்த்து தரும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் படிக்க | நச்சுனு கிஸ் பண்ண மச்சினிச்சி: ஷாக் ஆன மணமகன், கடுப்பான மணமகள், வைரல் வீடியோ

நாய்க்கு பூனை மசாஜ் செய்வது, பூனையை ஆபத்திலிருந்து நாய் காப்பாற்றுவது போன்ற பல அழகான காட்சிகளின் வரிசையில் மற்றுமொரு அழகான காட்சி சேர்ந்துள்ளது.  அந்த அழகான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது, அந்த வைரல் வீடியோவில் ஒரு கூடையினுள் நாயும் பூனையும் ஒன்றையொன்று கட்டி தழுவி மகிழ்ச்சியுடன் விளையாடிக்கொண்டு இருக்கின்றது.  அடுத்த களிப்பில் நாயை மெத்தையாக பாவித்து நாயின் மீது ஏறி பூனை படுத்து கொள்கிறது அடுத்த க்ளிப்பில் பூனையின் நாயும் கட்டியணைத்துக்கொண்டு தூங்குவதுடன் இந்த அழகான வீடியோ நிறைவடைகிறது.

 

இந்த வீடியோவுக்கு நெருங்கிய நண்பர்கள் என்கிற வரிகள் கேப்ஷனாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.  ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கும் இந்த வீடியோவை பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  இதுவரை இந்த வீடியோவிற்கு இருபத்தி ஒன்றாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல கமெண்டுகள் குவிந்துள்ளது.

மேலும் படிக்க | Video: ஆடையின்றி வந்த பிரபல மாடல்... மிரண்ட பார்வையாளர்கள் - இனி இப்படிதான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News