What the fish! வலையில் சிக்கிய மெகா மீன்: Viral ஆகும் ராட்சத மீனின் படங்கள்

இந்த மீன் பிடிபட்டதை தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதும் இந்த குழுவினர், அதனுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். தற்போது அந்த மீனின் படம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 5, 2021, 03:11 PM IST
  • அமெரிக்காவில் சிக்கிய ராட்சத மீன்.
  • இதன் வயது 100-ஐ விட அதிகமாக இருக்கும் என கணிப்பு.
  • மீனின் படம் சமூக ஊடகங்களின் வைரல்.
What the fish! வலையில் சிக்கிய மெகா மீன்: Viral ஆகும் ராட்சத மீனின் படங்கள் title=

புதுடெல்லி: நம் வாழ்வில் பல சமயங்களில் ஏதோ ஒன்று செய்யப்போய் ஏதோ ஒன்று நடக்கும். காற்று வாங்கப் போய் கவிதை வாங்கி வந்தவர்கள் ஏராளம். அமெரிக்காவில் சமீபத்தில் சிலரது வாழ்க்கையில் அப்படி ஒரு நிகழ்வு நடந்துள்ளது.

மீன் பிடிக்க சென்ற ஒரு குழுவின் வலையில், அவர்கள் கனவிலும் கண்டிறாத அளவுக்கு ஒரு மிகப்பெரிய மீன் சிக்கியது. அமெரிக்காவில் ஆற்றில் பிடிபட்ட 108 கிலோ எடையுள்ள 2 மீட்டர் நீளமுள்ள அந்த மீனின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது (Viral). 

அல்பேனா ஃபிஷ் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்தின்படி, டெட்ராய்ட் ஆற்றில் சிக்கிய இந்த பெண் மீனின் (Fish) வயது 100-க்கும் மேல் இருக்கும் என  மதிப்பிடப்பட்டுள்ளது.

"தேவையான சிகிச்சைகள் அளிக்கப்பட்ட பிறகு இந்த அழகிய மீன் மீண்டும் ஆற்றில் விடப்பட்டது" என்று அல்பேனா மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகம் பேஸ்புக்கில் தெரிவித்தது. அந்த பெரிய மீனின் படத்தையும் அலுவலகம் பகிர்ந்தது. 

Now that's how you take a fish photo! The Alpena Fish and Wildlife Conservation Office crew caught this 240 pound, 6' 10...

Posted by U.S. Fish and Wildlife Service on Monday, 3 May 2021

ALSO READ: Son Sale: மகனை 18 லட்ச ரூபாய்க்கு விற்று புது மனைவியுடன் ஜல்சா செய்யும் அப்பா

"இப்படித்தான் ஒரு மீனின் புகைப்படத்தை எடுக்க வேண்டும்! அல்பேனா ஃபிஷ் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகக் குழு கடந்த வாரம் டெட்ராய்ட் ஆற்றில் இந்த 240 பவுண்டுகள் எடையுள்ள, 6 '10" பெண் மீனைப் பிடித்தது. இதன் வயது 100-லக்கும் மேல் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது! தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு உடனடியாக இந்த மீனை நாங்கள் ஆற்றில் விட்டோம்" என்று அக்குழு பதிவில் எழுதியுள்ளது. 

இது போன்ற நிகழ்வுகள் வாழ்வில் ஒரு முறைதான் நடக்கும் என இந்த குழுவை சேர்ந்தவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் பிடிக்கப்பட்ட பெரிய மீன்களின் பதிப்பில் இந்த மீன் மிகப்பெரிய மீன்களில் ஒன்றாகும் என்று குழு கூறியது. 

இந்த மீன் பிடிபட்டதை தங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்வாக கருதும் இந்த குழுவினர், அதனுடன் புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டனர். தற்போது அந்த மீனின் படம் சமூக வலைத்தளங்களில் (Social Media) வைரல் ஆகி வருகிறது.

ALSO READ: சாராயக் கடையை திறந்தால் ஓடி ஒளியும் கொரோனா, டெல்லி பெண்ணின் கோரிக்கை Video Viral

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News