சில பெண்களுக்கு மிக குறைந்த வகையில் மெல்லிய மீசை முளைத்திருப்பதை பார்த்திருப்போம். இது ஹார்மோன் பிரச்சனை காரணமாக ஏற்படுகிறது என மருத்துவர்கள் கூறுவர். சிலருக்கு மிக மிக மெலிதாக இருந்தாலு, தன்னை அழகு படுத்திக் கொள்ள மீசையை ப்யூட்டி பார்லர் சென்று நீக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்தவர் ஷைஜா என்ற 34 வயதான பெண் தன்னை மீசைக்காரி என்றே பெருமையுடன் அறிமுகம் செய்து கொள்கிறார்.
மீசையை ஷேவ் செய்யும்படி அடிக்கடி பலர் கூறினாலும் மீசையை ஷேவ் செய்யும் எண்ணமே இல்லை என அவர் கூறுகிறார். டீன் ஏஜ் பருவத்தில் இருந்த சமயத்தில் மேல் உதட்டில் முடி வளர தொடங்கியது. முதலில் குறைந்த அளவே முடி இருந்ததால் அதைக் கண்டுகொள்ளவில்லை. இருப்பினும், காலப்போக்கில் முடி அதிகமாக வளரத் தொடங்கியது. ஆனால், தனக்கு மீசை வளர்வதை நினைத்து ஒரு போதும் ஷைஜா கவலைப்படவே இல்லை.
ஷைஜா, பெரும்பாலான பெண்களைப் போல இல்லாமல், தனது மேல் உதடுகளில் முடியை வளர்க்க முடிவு செய்தார். மீசை இல்லாமல் வாழ்வதை தன்னால் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்கிறார். கோவிட் தொற்றுநோய் பரவலின் போது, மாஸ்க் அணிவதை நான் விரும்பவில்லை, ஏனெனில் அது என் முகத்தை மறைத்தது," என்று ஷைஜா கூறினார்.
மேலும் படிக்க | Viral News: ₹3,419 கோடி மின்சார பில் கொடுத்த ஷாக்; மயங்கி விழுந்த வீட்டு உரிமையாளர்
ஷைஜாவின் மீசை இப்போது அவளது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அதை அவள் ஆர்வமாக பராமரிக்கிறாள். பலர் அடிக்கடி கேலி செய்தாலும், மீசை மீது காதல் இருப்பதால் ஷைஜா மீசையை அகற்றவில்லை.
தனது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ கூட தனது மீசையை ஆட்சேபிப்பதில்லை என்றும், அதானால் மற்றவர்கள் தனது தோற்றத்தைப் பற்றி என்ன சொன்னாலும் அதற்காக நான் கவலைப்படுவதில்லை என்றும் ஷைஜா கூறினார்.
ஷைஜாவிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கருப்பை அகற்ற அறுவை சிகிச்சை நடந்தது. அது மட்டுல்ல, கடந்த 10 ஆண்டுகளில் ஆறு அறுவை சிகிச்சை நடந்துள்ளது. கருப்பையில் இருந்து நீர்க்கட்டிகளை அகற்ற அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டது, மற்றொன்றில் மார்பகத்திலிருந்து ஒரு கட்டி அகற்றப்பட்டது. இந்த உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும், ஷைஜா தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, மகிழ்ச்சியாக வாழ்க்கையை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வெளியான பகீர் தகவல்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ