அந்தரங்க ‘பகுதிக்குள்’ நுழைந்த இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு; நடந்தது என்ன..!!

பிரிட்டனில், ஒரு நபர் தவறி வெடி குண்டு ஒன்றின் மீது தவறி விழுந்ததால், வெடிகுண்டு நேரடியாக அவரது அந்தரங்கப் பகுதிக்குள் சென்றதை அடுத்து அந்த நபர் வலியால் துடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 6, 2021, 01:22 PM IST
  • ஒரு நபரின் அந்தரங்கப் பகுதியில் ஆபத்தான வெடிகுண்டு புகுந்தது.
  • இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டு.
  • மருத்துவமனையில் ஏற்பட்ட பரபரப்பு.
அந்தரங்க ‘பகுதிக்குள்’ நுழைந்த இரண்டாம் உலகப் போர் வெடிகுண்டு; நடந்தது என்ன..!! title=

சில சமயங்களில் வினோதமான வகையில் ஆபத்தான விபத்துகள் நடக்கின்றன, அதை அறிந்தால், ஆச்சரியமும் அதிர்ச்சியும்  ஒரு சேர ஏற்படுகிறது. இங்கிலாந்தில் வசிக்கும் ஒருவருக்கு இதுபோன்ற விசித்திரமான விபத்தை சந்தித்தார். அந்த விபத்தில், ஒரு ஆபத்தான வெடிகுண்டு அவரது அந்தரங்கப் பகுதிக்குள் நுழைந்தது. இதையடுத்து அவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் மருத்துவர்களிடையே அச்சத்தில் ஆழ்த்தியது. 

கால் தவறியதில், பாதிக்கப்பட்ட அந்த நபர் நேராக வெடிகுண்டு மீது விழுந்தார்
பிரிட்டனில், Gloucester-ல் டிசம்பர் 2 அன்று, ஒரு நபர் மோசமாக காயமடைந்த நிலையில் Gloucestershire Royal Hospital என்ற மருத்துவமனைக்கு வந்தார். அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடனேயே, அவர் விபத்துக்குள்ளான விதத்தை கேட்டு அதிர்ச்சியில் உறைந்தனர். பாதிக்கப்பட்ட நபர் இராணுவ உறுப்பினர். அந்த நபர் தனது வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, கால் தவறி வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு மீது விழுந்துள்ளார்.

ALSO READ | நடுவானில் பயங்கரம்! விமானத்தின் மீது மோதிய பறவைக் கூட்டம்; நடந்தது என்ன!

அப்போது, அங்கே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு நேரடியாக அவனது அந்தரங்கப் பகுதிக்குள் சென்றது. இதையடுத்து வலியால் அலறியபடி நேராக மருத்துவமனைக்கு சென்றார். ஆஸ்பத்திரியை அடைந்ததும் அந்த நபரின் அந்தரங்க பகுதியில் வெடிகுண்டு இருந்ததை டாக்டர்கள் அறிந்ததும் பயத்தில் உறைந்தனர். இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம், முதலில் வெடிகுண்டு செயலிழக்கும் குழுவை அவசரமாக அழைத்தது.

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு

வெடிகுண்டு செயலிழப்பு குழு முதலில் வந்து வெடிகுண்டை செயலிழக்க செய்தது. இதனையடுத்து அந்த நபரின் அந்தரங்க பகுதியில் இருந்து வெடிகுண்டு அகற்றப்பட்டது. அந்த நபரின் அந்தரங்கப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வெடிகுண்டு இரண்டாம் உலகப் போரில் ராயல் பீரங்கிகளால் பயன்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 57 மிமீ விட்டமும் 170 மிமீ நீளமும் கொண்ட இந்த வெடிகுண்டு, பின்னர் வட ஆப்பிரிக்காவிலும் பிரிட்டிஷ் டாங்கிகளால் பயன்படுத்தப்பட்டது.

அந்த நபரின் வீட்டில் இந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. துப்புரவு பணியின் போது தவறி விழுந்ததில், வெடிகுண்டு நேராக அந்தரங்க உறுப்பில் நுழைந்தார். தற்போது அந்த நபர் தனது அந்தரங்க பகுதியில் இருந்து வெடிகுண்டை அகற்ற சிகிச்சை பெற்று, பின் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவர் குணமடைய சிறிது காலம் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ALSO READ | விண்வெளியில் அதிகரிக்கும் குப்பை; விண்வெளி நடையை ஒத்தி வைத்தது NASA!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News