’அந்தரத்தில் மரண சண்டை’ நண்பனுக்காக பாம்பை பதம் பார்த்த பல்லி: வைரல் வீடியோ

பாம்பு ஒன்று பல்லியை இரைக்காக பதம்பார்த்து கொண்டிருந்த நிலையில் திடீரென அங்கு வந்த மற்றொரு பல்லி பாம்பிடம் சண்டைபோட்டு அந்த பல்லியை மீட்ட வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகியுள்ளது.    

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 31, 2023, 05:28 PM IST
  • பாம்புடன் சண்டைபோடும் பல்லி
  • அந்தரத்தில் நடந்த மரண சண்டை
  • கடைசியில் நடந்தது இதுதான்
’அந்தரத்தில் மரண சண்டை’ நண்பனுக்காக பாம்பை பதம் பார்த்த பல்லி: வைரல் வீடியோ  title=

பாம்பு - பல்லிக்கு இடையே நடைபெற்ற சண்டைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?. இரைக்காக பாம்பு தனக்கு உகந்த எந்த உயிரினத்தையும் வேட்டையாடிவிடும். லாவகமாக காத்திருந்து தாக்கும் பாம்புகள், நொடியில் அந்த உயிரினத்தை கொத்திவிட்டு உடனடியாக அதனை தன் உடலைக் கொண்டு சுருட்டி மூச்சு திணறல் ஏற்படுத்தி உயிரிழக்க வைத்துவிடும். பின்னர் மெதுவாக அந்த இரையை உண்ணும். இதுதான் பாம்புகளின் வழக்கம். விஷம் உள்ள பாம்பாக இருந்தாலும் சரி, விஷம் இல்லாதவையாக இருந்தாலும் சரி, இரை கொல்ல பாம்பு கையாளும் யுக்தி இதுதான். இரை இறந்தபிறகு மெதுவாக விழுங்கும். 

அது இருக்கும் உடல் வலிமைக்கு ஏற்ப இரையை தேர்வு செய்யும். சிறிய பல்லி முதல் பெரிய ஆடு வரை பாம்புகள் வேட்டையாடும். மற்ற உயிரினங்களைக் காட்டிலும் பாம்பை பொறுத்தவரை இரையை பிடிக்க கொஞ்சம் அதிக சிரத்தை எடுக்க வேண்டியிருக்கும். கால்கள் கூட அதுக்கு இல்லாததால் நீண்ட உடல் அமைப்பையே வேட்டைக்காக பயன்படுத்த வேண்டியிருக்கும். சில நேரங்களில் கை கொடுக்கும் இந்த டெக்னிக் பல நேரங்களில் கைகொடுக்காமலும் போகும். சில உயிரினங்கள் பாம்புடன் படு பயங்கரமாக சண்டையிட்டு கொள்ளும். இது தொடர்பான வீடியோக்கள் ஏராளம் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருக்கின்றன. 

மேலும் படிக்க | எருமைகள் மீது நாயின் சூப்பர் சவாரி.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வேற லெவல் வைரல் விடியோ

அப்படியான ஒரு வீடியோ தான் இப்போது இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகியிருக்கிறது. இரைக்காக சென்ற பாம்பு சரியாக பிளான் பண்ணி பல்லி ஒன்றை வேட்டையாடிவிட்டது. ஆனால், அதனை பார்த்துக் கொண்டிருந்த மற்றொரு பல்லி, தனது நண்பனுக்காக களத்தில் இறங்கி பாம்புடன் சண்டையிட்டு காப்பாற்றியுள்ளது. மிக உயரமான மற்றும் கற்பாறைகளின் மீது இந்த சண்டை நடந்திருக்கிறது. இறுதியாக பல்லி தான் வெற்றி பெற்றது. வேட்டையாடப்பட்ட பல்லி உயிர் பிழைத்து ஓடிவிட, காப்பாற்ற வந்த பல்லியும், பாம்பும் மிக உயரமான இடத்தில் இருந்து கீழே விழுந்துவிட்டன. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

18 மணி நேரத்துக்கும் முன்பாக பதிவேற்றப்பட்ட இந்த வீடியோ இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேலான பார்வைகளையும், 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்குகளையும் பெற்றுள்ளது. பல்லியும், பாம்பும் சண்டைபோட்டுக் கொள்வது பார்க்கும்போது மனத்துக்குள் ஏதோ ஒரு கனத்த உணர்வை ஏற்படுத்துவதாக அந்த வீடியோவுக்கும் கீழ் பார்வையாளர்கள் கமெண்ட் அடித்துள்ளனர். மேலும், இந்த சம்பவத்தை அழகாக படம்பிடித்த வீடியோ நிபுணருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | ரன்னிங்கில் இறங்கி மாஸ் காட்டும் நாய்: மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News