எம்.ஐ.டி மாணவர்கள் குழுவுடன் இணைந்து நடிகர் அஜித் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை பறக்கவிடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது!
அண்ணா பல்கழைக்கழகத்தைச் சேர்ந்த மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் டெக்னாலஜியின் ஆளில்லாத சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைக்கும் மாணவர் குழுவிற்கு ஆலோசகராக நடிகர் அஜித் கடந்த மே மாதம் நியமிக்கப்பட்டார். இந்த குழுவானது தற்போது சிறிய ரக ட்ரோன் விமானத்தை வடிவமைப்பதில் பல புதிய யுக்திகளை வெளிப்படுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது மருத்துவ தேவையின் போது மனித உறப்புகளை தாங்கிச் சென்று விரைவில் சேர்க்கும் வகையில் புதிய ரக விமானத்தினை வடிவமைத்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் இந்தியா முழுவதுமுள்ள 111 பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட ஆளில்லா குட்டி விமானம் பறக்கவிடும் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அஜித் ஆலோசகராக உள்ள எம்.ஐ.டி மாணவர்கள் குழுவும் பங்கேற்றது.
Proud be a thala fan#thala
Waiting for #ViswasamUpdate #Dhaksha india pic.twitter.com/X5pZSYZ1xU— Ughesh kumar (@Ugheshkumar56) October 11, 2018
அதில், எம்.ஐ.டி மாணவர்கள் தயாரித்த தக்ஷா குட்டி விமானம் பறக்கவிடப்பட்டது. இந்த விமானமானது தரையில் இருந்து 10 முதல் 15 அடி உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டதுடன், 06:07:45 மணிநேரம் வரை பறந்தது. மேலும் இந்த ஆளில்லா விமானம் சுமார் 10 கிலோ வரையிலான எடையை சுமந்துச்செல்லும் எனவும் அறிவிக்கப்பட்டது. எனவே இந்த விமானத்தை ஏர் ஆம்புலன்ஸாகவும் பயன்படுத்தலாம் இக்குழு தெரிவித்துள்ளது.
இந்த சாதனையைத் தொடர்ந்து எம்.ஐ.டி மாணவர்கள் குழுவுக்குத் தமிழக அரசு உயரிய விருந்து வழங்கி கவுரவம் செய்யப்பட்டது. இந்நிலையில் இக்குழுவோடு அஜித் ஆளில்லா விமானத்தை பறக்கவிடும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.