’கடவுளே என்ன காப்பாத்திரு’ குழந்தையிடம் தப்பிக்க அப்பா போட்ட பிளான்: வைரல் வீடியோ

ஷாப்பிங் மாலுக்கு குழந்தையுடன் செல்லும் அப்பா, பொம்மைகள் இருக்கும் பகுதி வந்தவுடன் செய்த ரியாக்ஷன் வீடியோ காண்போரை ரசிக்க  வைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : May 18, 2023, 07:25 PM IST
  • அப்பா - மகள் வீடியோ வைரல்
  • மகளை தூக்கிச் செல்லும் அப்பா
  • எதற்காக என தெரிந்தால் சிரிப்பீர்கள்
’கடவுளே என்ன காப்பாத்திரு’ குழந்தையிடம் தப்பிக்க அப்பா போட்ட பிளான்: வைரல் வீடியோ title=

குழந்தைகள் இருந்தாலே அந்த இடம் மகிழ்ச்சியாக தான் இருக்கும். ஆனால், அவர்களை எல்லா நேரங்களிலும் பெற்றோரால் மகிழ்ச்சிபடுத்த முடியுமா? என்றால் அது கேள்விக்குறி தான். சில நேரங்களில் அவர்களின் மகிழ்ச்சியை தள்ளிப்போட வேண்டிய சூழல் பெற்றோருக்கு வரும். ஏனென்றால் பெற்றோருக்கு அந்த சூழல் தெரியும். தர்ம சங்கடமான இடம் என்றால், பல கோணங்களில் யோசித்து குழந்தைகளை சமாளிக்க முடிவெடுப்பார்கள். அது அவர்களுக்கு கை கொடுக்கும். ஆனால், வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு புரியாது, எதற்காக அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று. 

உதாரணமாக ஓர் திருவிழாவுக்கு குழந்தையை பெற்றோர் அழைத்துச் செல்கிறார் என்றால், அங்கிருக்கும் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகளை பெற்றோர் கண்குளிர காண்பித்து அழைத்து வருவார்கள். அதேநேரத்தில் அங்கிருக்கும் பொம்மைகள் உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள் குழந்தைகளுக்கு பிடித்தமானவையாக இருக்கும். அதனை அவர்கள் பார்த்தவுடன் வாங்கிக் கொடுக்குமாறு கேட்பார்கள். ஆனால், அது பெற்றோரால் முடியுமா என்றால், எல்லா பெற்றோராலும் முடியாது. ஏனென்றால் பொருளாதார விஷயங்களை மனதில் வைத்து அனைத்தையும் முடிவெடுப்பார்கள். 

மேலும் படிக்க | குழாயில் மறைந்திருந்த நாகப்பாம்பு, பதற வைக்கும் வைரல் வீடியோ

அப்போது, வாங்கிக் கொடுக்க முடியாது என தெரிந்தவுடன், குழந்தைகளை மனம் கோணாமல் அவர்களை அந்த டாப்பிக்கில் இருந்தது மடைமாற்றுவார்கள். அதற்காக அவர்கள் எடுக்கும் பகீரத முயற்சி ரசிக்கும் வகையில் இருக்கும். அப்படியான  சம்பவத்தை குறிக்கும் வீடியோ தான் இப்போது டிவிட்டர் உள்ளிட்ட சமூக இணைய பக்கத்தில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில், ஒரு பெரிய ஷாப்பிங் மாலுக்கு மகளுடன் ஒரு அப்பா செலகிறார். வேகவேகமாக நடந்து செல்லும் இருவரும் பொம்மைகள் இருக்கும் பகுதிக்கு வந்துவிடுகிறார்கள். உடனே சுதாரித்துக் கொண்ட அப்பா, தன் குழந்தையை ஆசையாக தூக்கிக் கொள்வதுபோல் செய்து அவரின் கண்களை மூடி அந்த பகுதியை கடக்கிறார்.

அது பொம்மைகள் இருக்கும் பகுதி என்பது குழந்தைக்கு தெரியவில்லை. இந்த வீடியோவை இணையத்தில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர் வெகுவாக ரசித்துள்ளனர். இது செம ஐடியாவாக இருக்கிறது... இனி வரும் காலத்தில் இதனை நாங்களும் அப்ளை செய்து கொள்கிறோம் என சிரித்துக் கொண்டே கமெண்ட் அடித்துள்ளனர்.

மேலும் படிக்க | பயத்தில் நடுங்கிய நாய்..பாச மழை பொழிந்த டாக்டர்: ஆனந்த கண்ணீரில் நெட்டிசன்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

 

Trending News