நடிகை வனிதா விஜயகுமார் தனிப்பட்ட முறையில் அல்லது தொழில் ரீதியாக தனது தைரியமான முடிவுகளுக்கு பெயர் பெற்றவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திடீரென இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் பீட்டர்பாலை (Peter Paul) பிரிந்தது ஏன் என்பது குறித்து வனிதா தனது தரப்பிலிருந்து நீண்ட விளக்கத்தை அளித்து இருந்தார். இதற்கிடையில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் மீண்டும் பீட்டர் பாலுடன் வாழ வனிதா (Vanitha Vijayakumar) ஆசைப்பட்டதாகவும் ஆனால் பீட்டர்பால் தான் அவரை நிராகரித்து விட்டதாகவும் செய்திகள் வந்தன. இந்த வதந்திகள் குறித்து கருத்து தெரிவித்த வனிதா, ‘இதுவரை என்னை யாரும் நிராகரித்தது இல்லை, நான் தான் நிராகரித்து இருக்கிறேன். என்னால் ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது.
ALSO READ | பீட்டர் பால் பற்றிய சமீபத்திய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வனிதா விஜயகுமார்
எனக்கு பீட்டர் பாலுடன் சட்ட ரீதியாகவோ, உணர்வு ரீதியாகவோ எந்த ஒரு உறவும் இல்லை. நான் என் வழியில் வலியை சுமந்து கொண்டு செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என்று பதிவு செய்து அதனை நடிகை உமா ரியாஸ்கானுக்கு டேக் செய்து உள்ளார். இதனை அடுத்து வனிதாவுக்கு மீண்டும் காதல் வந்து விட்டதா? என்று ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறது.
To all my well wishers and media friends..some baseless rumors are being circulated as news claiming me trying to patch up and get back and I being rejected.kindly refrain from hallucinating such illusions as I have never been rejected in my life by anyone. It would have been me
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) November 4, 2020
ALSO READ | இணையத்தில் வைரலாக்கும் வனிதா விஜயகுமாரின் இந்த டாட்டூ
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR