புற்றுநோயை குணப்படுத்த, நாய்குட்டியின் சிறுநீர்... அதிர்ச்சி வைத்தியம்!

உண்மையில் நாய்குட்டியின் சிறுநீருக்கு புற்றுநோயினை தீர்க்கும் சக்தி உள்ளதா?...

Last Updated : Dec 12, 2018, 06:17 PM IST
புற்றுநோயை குணப்படுத்த, நாய்குட்டியின் சிறுநீர்... அதிர்ச்சி வைத்தியம்! title=

தான் வளர்க்கும் செல்ல பிராணிகள் மீது இளம்பெண்களுக்கான காதல் எப்போதும் அதிகம் தான், குறிப்பாக நாய் குட்டிகளுக்கும், பெண்களுக்கும் இடையேயான பாச பினைப்பு அதிகமாகவே இருக்கும்.

ஆனால்., ஐக்கிய நாட்டு இளம்பெண் ஒருவர் தன் நாய்குட்டி மீதான காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தனது நாய்குட்டியின் சிறுநீரினை பிடித்து குடித்து வருகின்றார்.

Lynn Lew, என்றழைக்கப்படும் whitney wisconsin ஐக்கிய நாட்டின் 21 வயது இளம்பெண். Youtube-ல் தான் பதிவேற்றும் சர்ச்சை வீடியோக்களால் பிரபலமாகி வரும் இவர் தற்போது மற்றுமொரு சர்ச்சைக்குறிய வீடியோவினை பதிவேற்றியுள்ளார்.

இந்த வீடியோவில் இவர் தனது நாயின் சிறுநீரகத்தினை பிடித்து குடிப்பது போல் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. இது ஒன்றும் சர்ச்சை இல்லை... இந்த செயல்பாட்டிற்கு இவர் அளித்த விளக்கம் தான் சர்ச்சைக்குறிய பொருளாய் மாறியுள்ளது.

ஆதாவது ஆரம்பத்தில் acne எனப்படும் பருக்கலை அகற்ற தன் நாய்குட்டியின் சிறுநீரகத்தினை குடித்த இவர், பின்னாளில் இதனை வழக்கமான ஒரு செயல்பாடாக பின்பற்றி வந்துள்ளார். மேலும் தனது நண்பர்களையும் இவ்வாறு செய்யுமாறு தெரிவித்துள்ளார். இதன் உச்சகட்டமாக, தனது நாய்குட்டியின் சிறுநீர் புற்றுநோயினை கூட தீர்க்கும் வல்லமை படைத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையினை கிளப்பியுள்ளது.

உண்மையில் நாய்குட்டியின் சிறுநீருக்கு புற்றுநோயினை தீர்க்கும் சக்தி உள்ளதா?...

Trending News