மானின் மாஸ் சண்டை, சிங்கம் வாங்கிய பல்பு: சினிமாவை மிஞ்சும் வைரல் வீடியோ

Animal Fight Viral Video: இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. அப்படி ஒரு வியக்க வைக்கும் காட்சியை நாம் இந்த வீடியோவில் காண்கிறோம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 23, 2023, 12:16 PM IST
  • சமீபத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
  • இதில் ஒரு கொடூரமான சிங்கம் காட்டுக்குள் மான்களை வேகமாக தாக்கி அவற்றை வேட்டையாட முயற்சிக்கின்றது.
  • இதைக் கண்ட மான் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஓடுகின்றது.
மானின் மாஸ் சண்டை, சிங்கம் வாங்கிய பல்பு: சினிமாவை மிஞ்சும் வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சிங்கத்தை காட்டின் ராஜா என்று அழைக்கிறார்கள். காட்டில் உள்ள வேறு எந்த மிருகத்துக்கும் சிங்கத்தை எதிர்கொள்ள தைரியம் வராது. பிற மிருகங்களை வேட்டையாடும் கொடூர மிருகங்களும் காட்டின் அரசன் சிங்கத்தை பார்த்தால் வேறு பாதையில் சென்று விடும். சிங்கத்தின் சாகசத்தை எடுத்துக்காட்டும் பல வீடியோக்களை நாம் தினம் தினம் சமூக ஊடகங்களில் காண்கிறோம். 

காட்டின் ராஜாவான சிங்கம் பெரும்பாலும் பெரிய அளவு சிரமப்படாமல் மற்ற மிருகங்களை வேட்டையாடி விடுகின்றது. ஆனால், சில சமயங்களில் அது ஏமாற்றம் காண்பதும் உண்டு. யாரும் எதிர்பாராத வகையில் சிங்கம் தனது வேட்டையில் தோற்றுப்போவதும் உண்டு. அப்படி ஒரு வீடியோ சமீபத்தில் பகிரப்பட்டுள்ளது. 

இந்த வீடியோவை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது. அப்படி ஒரு வியக்க வைக்கும் காட்சியை நாம் இந்த வீடியோவில் காண்கிறோம். இதைப் பார்த்த இணையவாசிகள் திகைப்பில் உள்ளனர். 

சமீபத்தில் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில் ஒரு கொடூரமான சிங்கம் காட்டுக்குள் மான்களை வேகமாக தாக்கி அவற்றை வேட்டையாட முயற்சிக்கின்றது. இதைக் கண்ட மான் தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேகமாக ஓடுகின்றது. ஆனால் விடாமல் துரத்தும் சிங்கம் அதன் மீது பாய்ந்து ஏறிக்கொண்டு தன் நகங்களால் அதனை பிடித்துக்கொள்கிறது. மறுபுறம், மானும் தோல்வியை ஒப்புக்கொள்ளத் தயாராக இருப்பதாகத் தெரியவில்லை, தன் உயிருக்கான போராட்டத்தில் மான் காட்டும் தைரியத்தை பார்த்து நமக்கும் வியப்பே மேலோங்குகிறது. 

மேலும் படிக்க | நாகப்பாம்பின் வாலை இழுத்து அதிர்ச்சி கொடுத்த குரங்கு, வீடியோ வைரல்

மான் சிங்கத்தை முந்தியது

இந்த வைரலான வீடியோ சமூக வலைத்தளங்களில் பல தளங்களில் வெளியாகி வருகிறது. இதை ஐபிஎஸ் அதிகாரி ரூபின் சர்மா ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் சிங்கம் ஒன்று மானை வேட்டையாடுவதை காண முடிகின்றது. மானை பிடிக்கும் சிங்கம் அதன் முதுகில் ஏறுவதையும் காண முடிகின்றது. அதே நேரத்தில், மான் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தவரை முயற்சிப்பதையும் காண முடிகின்றது. தன் உடலை வேகமாக உலுக்கி அதன் மூலம் கொடூர சிங்கத்தை மான் கீழே விழ வைக்கின்றது. இதை எதிர்பார்க்காத சிங்கம் கீழே விழுகிறது. இப்படி பல முறை நடக்கின்றது. ஆனால், இறுதியில் மானின் உயிர் போராட்டத்திற்கான உறுதிக்கு முன்னால் சிங்கம் தோற்று போகிறது. தன் உயிரை காப்பாற்றிக்கொண்ட மான் வேகமாக ஓடி, அப்பகுதியிலிருந்து வெளியேறுகிறது.

சிங்கத்துக்கு டிமிக்கி கொடுத்த மானின் வீடியோவை இங்கே காணலாம்:

பயனர்களின் உள்ளங்களை கொள்ளைகொண்ட வீடியோ

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதில் சிங்கம் வேட்டையாடுவதில் தோல்வியடைந்ததைக் கண்டு பயனர்கள் திகைத்து நிற்கின்றனர். அதே நேரத்தில், செய்தி எழுதும் வரை, சமூக வலைதளங்களில் வீடியோ 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை பார்க்கப்பட்டுள்ளது. வீடியோவைப் பார்த்த இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். ‘கடவுளின் அருள் இருக்கும் ஒருவரை யாரும் ஒன்றும் செய்ய முடியாது’ என ஒருவர் எழுதியுள்ளார். ‘மனதில் உறுதி இருந்தால் முடியாதது ஒன்றும் இல்லை’ என மற்றொருவர் கருத்து தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க | ஆக்ரோஷமாக துரத்தும் முதலை ... தப்பிக்க ஓடும் ஊழியர்: பதறவைக்கும் வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News