உலக நாயகனும் - சாம்பியனும் சந்தித்தால்... வைரலாகும் Pics...!

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல் ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிரவோ சந்திதுள்ளார்...

Last Updated : Dec 11, 2019, 03:34 PM IST
உலக நாயகனும் - சாம்பியனும் சந்தித்தால்... வைரலாகும் Pics...! title=

அறுவை சிகிச்சை முடிந்து மருத்துவ ஓய்வில் இருக்கும் கமல் ஹாசனை, கிரிக்கெட் வீரர் பிரவோ சந்திதுள்ளார்...

ஜூலை 2016-ல் கூட்டு எலும்பு முறிவு ஏற்பட்டதால், கமல்ஹாசனின் வலது காலில் வைக்கப்பட்டிருந்த ஒரு உள்வைப்பை அகற்றுவதற்காக நவம்பர் 22-ஆம் தேதி மற்றொரு அறுவை சிகிச்சை நடைப்பெற்றது. அந்த அறுவை சிகிச்சை முறையிலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது மீண்டு வருகிறார்.

இதற்கிடையில், சர்வதேச கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ இன்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனை மரியாதை நிமித்தமாக சந்திதுள்ளார். பிஹைன்ட்வுட்ஸின் "குளோபல் ஐகான் ஆஃப் இன்ஸ்பிரேஷன்" தங்கப் பதக்கத்தை வென்ற பிரவோ, தனது நிகழ்ச்சியைன தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனை சந்திதுள்ளார்.

தற்போது அறுவை சிகிச்சையில் இருந்து மீண்டு வரும் நடிகர் கமல்ஹானை பிரவோ சந்திதுள்ள சம்பவத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் கமல்ஹாசனுக்கு அவரது கையொப்ப சேகரிப்பில் இருந்து டி-ஷர்ட்டை பரிசாக வழங்கியதாகவும் கூறப்படுகிறது! இந்த புகைப்படங்களை மக்கள் நீதி மய்யம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் அடுத்து நடித்துவரும் திரைப்படம் இந்தியன் 2. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், விவேக், சமுத்திரகனி, ராகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், வித்யுத் ஜம்வால், டெல்லி கணேஷ், மற்றும் மற்றவர்கள் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்.

முன்னதாக சித்திரம் பேசுதடி 2 திரைப்படத்தில் கெஸ்ட் ரோல் அளித்திருந்த பிராவோ தற்போது கமல்ஹானை சந்தித்துள்ள நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தில் ப்ரவோ நடிக்கின்றாரா? என்ற கேள்விஇணைய வாசிகள் மத்தியில் எழுந்துள்ளது. 

Trending News