காட்டுமிராண்டித்தனமாக 7 வயது சிறுவனை தாக்கிய டியூஷன் மாஸ்டர்....

ஏழு வயதான சிறுவனை அவரது டியூஷன் மாஸ்டர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது!  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 19, 2018, 03:14 PM IST
காட்டுமிராண்டித்தனமாக 7 வயது சிறுவனை தாக்கிய டியூஷன் மாஸ்டர்.... title=

ஏழு வயதான சிறுவனை அவரது டியூஷன் மாஸ்டர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் வீடியோ காட்சி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது!  

ஏழு வயதுடைய ஒரு சிறுவனை அவரது டியூஷன் மாஸ்டர் மிகவும் காட்டுமிராண்டித்தனமான முறையில் அவரை தாக்கும் காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகி அந்த வீடியோ பதிவு சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. 

சுமார் ஆறு நிமிட நீளமுள்ள அந்த வீடியோ பதிவில் அந்த ஆசிரியர் அந்த சிறுவனின் தலைமுடியை பிடித்து ஆட்டிக்கொண்டு அவரை தாக்குகிறார். மேலும், அவர் அந்த சிறுவனை கண்ணாடி போன்ற ஒரு மென் பொருளைக்கொண்டு பயப்படும் வகையில் அவரை சரமாரியாக தாக்குகிறார். இவ்வளவு கொடுமைகளும் போதாதது என அந்த ஆசிரியர் அந்த பையனின் விரல்களை எடுத்து அவற்றைக் கடிக்கிறார். மேலும், அவர் ஒரு கிளாஸ் தண்ணீரைக் அவனிடம் கொடுத்து, சிரிக்குமாறு கேட்கிறார்.

இந்த சம்பவம் முழுவதும் முழுவதும் மூடப்பட்ட அறை ஒன்றில் ஒன்றில் நடந்துள்ளது. அந்த அறைக்குள் அந்த சிறுவனை அந்த ஆசிரியர் மனசாட்சியே இன்றி மிருகத்தனமாக தாக்கியுள்ளார். இதையடுத்து, அந்த குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே அந்த குழந்தையின் தந்தை இது குறித்து ஆராய்ந்துள்ளார். இதன் பின்னர், அந்த சிறுவனின் தந்தை அங்கு பொருத்தப்பட்டுள்ள CCTV கேமரா காட்சிகளை பரிசோதித்து பார்க்கையில் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து சிறுவனின் தந்தை ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "இந்த மனிதர் என் குழந்தைக்கு என்ன செய்தார் என்பதை நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன், "நான் வீட்டில் அந்த வீடியோ பதிவை பார்க்கும் பொது என்மகனின் அழுகையை என்னால் கேட்கமுடியவில்லை என அவர் கூறியுள்ளார். 

இந்த மிருகத்தனமான தாக்குதலை கண்டறிந்த சிறுவனின் தந்தை அந்த ஆசிரியர் மீது காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். அந்த ஆசிரியர் தலைமறைவாக உள்ளத்தால காவல்துறையினர் தேடி வருகின்றனர். அந்த ஆசிரியருக்கு எதிராக ஐபிசி பிரிவு 307 (கொலை செய்ய முயற்சி) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக காவல்துறை அதிகாரி அவுதுோஷ் திவிவேதி தெரிவித்துள்ளார். 

 

Trending News