செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது trailer!

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

Last Updated : Sep 22, 2018, 11:42 AM IST
செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது trailer! title=

செக்கச் சிவந்த வானம் திரைப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்!

'காற்று வெளியிடை' திரைப்படத்தினை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உறுவாகி வரும் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, ஃபகத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் களமிறங்கியுள்ளது.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புராடக்ஷன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பெயர் தமிழில் 'செக்கச்சிவந்த வானம்' என்றும், தெலுங்கில் நவாப் என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் முதல் ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனைதொடர்ந்து இத்திரைப்படத்தின் பாடல்கள் இரண்டினை படக்குழுவினர் கடந்த செப்டம்பர் 6-ஆம் நாள் வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் இரண்டாவது ட்ரைலரினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படமானது வரும் செப்டம்பர் 27-ஆம் நாள் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

Trending News