திண்டுக்கல் மாவட்டதிதல் பிரேக் பிடிக்காமல் சென்ற அரசுப் பேருந்தை, இளைஞர்கள் சிலர் பெரிய கற்களை கொண்டு நிறுத்தும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கலில் இருந்து சிலுக்குவார்பட்டி வழித்தடத்தில் சென்ற அரசு பேருந்து பிரேக் இல்லாமல் சென்றுள்ளது. இந்த பேருந்து பேகம்பூர் பகுதியை கடந்தபோது, பேருந்தில் பிரேக் வேலை செய்யாததை உணர்ந்த ஓட்டுநர், வேகத்தை குறைத்ததோடு, சாலையோரம் சென்றவர்களை நோக்கி கூச்சலிட்டார். இதைக்கேட்ட இளைஞர்கள் சிலர் பெரிய கற்களை பேருந்து டயர்களின் அடியில் போட்டு பேருந்தை நிறுத்தினர்.
இந்த சம்பவத்தை அருகில் இருந்த இளைஞர்கள் வீடியோவாக பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான பல தலைப்புகளையும் நெட்டிசன்கள் இட்டு பகிர்ந்து வருகின்றனர்.
குறிப்பாக., "பிரேக் இல்லாமல் ஓடும் அரசு பஸ்...
இறங்கவேண்டிய இடத்தில் உறவினர், நண்பர்கள், எவருக்காவது போன் செய்து கல்லோடு வந்து டயருக்கு அடியில் போட்டு. இறங்கவேண்டிய இடத்தில் இறங்கி கொள்ளும் வசதி TNSTC. அறிமுகம்..." என்னும் தலைப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.