சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதில் குடிமகன்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன.
மே 10 முதல் அமலில் உள்ள கடுமையான ஊரடங்கில் டாஸ்மாக் கடைகளும் (Tasmac Shops) மூடப்பட்டன. இதனால் மன வாட்டத்தில் இருந்த மது பிரியர்கள் தற்போது குதூகலத்துடன் இருக்கிறார்கள். இன்று காலை மதுபானக் கடைகள் மீண்டும் திறக்கப்பட்ட உடனேயே தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்த ஒருவர் மது பாட்டில்களை வழிபடுவதைக் காண முடிந்தது. ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், ஒரு மதுபான கடைக்கு வெளியே அவர் கற்பூரம் ஏற்றுவதையும், அவர் கடையில் இருந்து வாங்கிய இரு மதுபான பாட்டில்களையும் முத்தமிடுவதையும் காண முடிகிறது.
இந்த முழு சம்பவமும் அங்கிருந்த நபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களால் படம்பிடிக்கப் பட்டது. அது ஆன்லைனில் வெளியிடப்பட்டதிலிருந்து, அந்த நபரின் வீடியோ இணையத்தில் வெகுவாக வைரல் (Viral Video) ஆகி வருகிறது.
"மாநிலத்தில் மதுபானக் கடைகளை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்ததை அடுத்து, மதுரையில் உள்ள ஒரு மது பிரியர் மது பாட்டில்களை வணங்குகிறார்" என்ற தலைப்பில் அந்த வீடியோவை செய்தி நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.
#WATCH | A local in Madurai worships bottles of liquor after Tamil Nadu govt permits the reopening of liquor shops in the state pic.twitter.com/sIp9LUR0GM
— ANI (@ANI) June 14, 2021
நாட்டில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதை அடுத்து தமிழகத்திலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து இன்று தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படவே பல்வேறு குடிமகன்கள் பல்வேறு விதத்தில் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். 35 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் உள்ள அழகு நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் அரசு நடத்தும் மதுபான விற்பனை நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் (MK Stalin), தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்ட போது, சில்லறை கடைகளில் உடல் வெப்ப சொதனை செய்தல், சானிடைசர்களை பயன்படுத்துதல் போன்ற விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். மற்ற கடைகள் மற்றும் சேவைகளுடன், அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களும் இன்று முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.
ALSO READ: Bizarre Truth: 28 மனைவிகள் முன்னிலையில் 37வது திருமணம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR