பிரபல நடிகை சன்னி லியோன், பிஹார் அரசாங்க இளநிலைப் பொறியாளர் தேர்வில் 98.50% மதிப்பெண் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!
பிஹார் மாநிலத்தில் அண்மையில் 200 இளநிலை பொறியாளர்களுக்கான பொது சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவு தேர்வு நடைப்பெற்றது. இந்த தேர்விற்கு 17,911 பேர் விண்ணப்பித்திருந்தனர், பின்னர் அதிலிருந்து 642 பேர் அடுத்த தேர்வுக்கு இறுதி செய்யப்பட்டனர்.
வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் சமீபத்தில் வெளியானது. இப்பட்டியலில் கனடாவில் பிறந்த நடிகை சன்னி லியோன் 98.5% மதிப்பெண்களோடு முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
பிஹார் பொது சுகாதாரத்துறையின் பொறியாளர் பிரிவு வலைதளமான phed.bih.nic.in இந்த தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. சன்னி லியோன் கல்வியில் 73.5% மதிப்பெண்களும் அனுபவத்தில் 25% மதிப்பெண்களும் பெற்று முதலிடம் பிடித்துள்ளார், இப்பெயர் பட்டியலில் இவர் சன்னி லியோன் தான் என்பதை உறுதிப்படுத்த அவரது தந்தை பெயராக லியோனா லியோனா-வும் இடம்பெற்றுள்ளது.
இவரை அடுத்த மூன்றாவது இடத்தில் “bvcxzbnnb” என்னும் நபர் 92.89% மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஊர் பெயர் அறியாத இவரின் தந்தை பெயர் “mggvghhnnnn” என குறிப்பிடப்பட்டுள்ளது.
குழுப்பங்கள் நிறைந்த இப்பட்டியலை குறித்து பிஹார் பொது சுகாதாரத்துறை அதிகாரி அசோக் குமார் தெரிவிக்கையில்., ''பட்டியலில் யாரோ தவறான தகவல்களை இணைத்திருக்கிறார்கள். இது ஆன்லைனில் தேர்வாளர்கள் அளித்த தற்காலிகப் பட்டியல்தான். தவறு களையப்பட்டு இறுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்'' என குறிப்பிட்டுள்ளார்.
HAHA, Im so glad the OTHER me has scored so well !!!!! lol... https://t.co/dV1RTQTN5J
— Sunny Leone (@SunnyLeone) February 20, 2019
இதற்கிடையில் தேர்வு முடிவு பட்டியலில் தனது பெயர் இடம்பெற்றுள்ளதை கண்டு வியந்துள்ள சன்னிலியோன்... ''ஹாஹா, என்னுடைய இன்னொரு 'அவதாரம்' நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருப்பதில் மகிழ்ச்சி'' என குறிப்பிட்டுள்ளார்.