விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், இன்னும் சில விஷயங்களுக்கு நம்மிடம் பதில் இல்லை. இயற்கையில் நடக்கும் பல வினோத விஷயங்களால், நாம் அனைவரும் குழப்பமடைகிறோம். குறிப்பாக, வினோதமான, விசித்திராமான இயற்கை நிகழ்வுகள் வரும்போது நாம் அதிர்ச்சியில் ஆழ்ந்து விடுகிறோம் . நம்மை குழப்பிய அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வுகளில் ஒன்று சீனாவில் நடந்தது.
திடீரென்று ஒரு நாள் பெய்ஜிங்கில் புழுக்கள் மழை பெய்தது. அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன, மழைக்குப் பிறகு நகரின் தெருக்களில் பல இடங்களில், வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிக அளவில் தோன்றியதால் மக்களும் அச்சமடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்தன. இது தொடர்பான அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் மிகவும் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க | அநாசமாய் சாலையைக் கடக்கும் அனகோண்டா பாம்பு! போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்த பாம்பு
அதிர்ச்சி தரும் வீடியோவை கீழே காணலாம்:
Se confirma el suceso con fecha modificada. Caen lombrices en #China. (28.02.2023). #Rain #Worms #zabedrosky #Phenomenon pic.twitter.com/TBr3aQfAtA
— Alerta Climática (@deZabedrosky) March 2, 2023
வெளியில் செல்பவர்கள் மறக்காமல் குடைகளை எடுத்துச் செல்லுமாறு சில சீன ஊடகங்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டன. சமூக ஊடகங்களில் வெளிவரும் படங்கள் மற்றும் வீடியோக்களில், பூச்சிகளை தவிர்க்க மக்கள் குடையுடன் நிற்பதை காணமுடிகிறது.
உண்மையில் நடந்தது என்ன!
சிலர் இவை புழுக்கள் மற்றும் பூச்சிகள் அல்ல, ஆனால் சீனாவில் காணப்படும் பாப்லர் பூக்கள் என்று கூறுகிறார்கள். இந்த நேரத்தில் மரங்களில் பூக்கள் மற்றும் விதைகள் நிறைந்திருக்கும். அதன் பூக்கள் உதிர்ந்தால் அவை புழுக்கள் போல இருக்கும் என்று ஒரு பிரிவினர் கூறுகிறார்கள். இதில் அசம்பாவிதம் எதுவும் இல்லை என்கின்றனர். ஆனால், சிலர் இதற்கு முன்னரும் பல இடங்களில் இதுபோன்ற விசித்திரமான மழை பெய்துள்ளது என்கிறார்கள். ஆனால் இதை அதிகாரிகள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | 6 மாதங்களுக்கு ஒரு முறை நாட்டை மாற்றும் தீவு! 364 ஆண்டு கால நடைமுறை!
மேலும் படிக்க | உடும்பை கடித்து குதறிய 10 அடி நீள கோப்ரா பாம்பு...வீடியோ வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ