5 KM ஆம்புலன்ஸ் பின்னால் விடாமல் ஓடிய பாசக்கார குதிரை, வைரல் வீடியோ

வெறும் 23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 5, 2022, 12:15 PM IST
  • குதிரையின் வைரல் வீடியோ
  • வெறும் 23 வினாடிகள் கொண்ட வீடியோ
  • இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
5 KM ஆம்புலன்ஸ் பின்னால் விடாமல் ஓடிய பாசக்கார குதிரை, வைரல் வீடியோ title=

பல்வேறு வகையான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அடிக்கடி வைரலாகின்றன, அவற்றில் சில மக்களை ஆச்சரியப்படுத்தும் மற்றும் சிந்திக்க வைக்கும் செய்கிறது. சமூக ஊடகங்களில் பல வித வினோத வீடியோக்கள் அவ்வப்போது வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தை கலக்கி வருகின்றது.

அதன்படி இந்த வீடியோவில் குதிரை ஒன்று செய்யும் செயல் நம்மை நிச்சயமாக சிந்திக்க வைக்கும். இந்த சம்பம் சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடந்துள்ளது. அந்த சம்பவம் மனிதர்களை விட விலங்குகளின் பாசமே மேல் என்பதை நமக்குக் காட்டியது. ஐஎஃப்எஸ் அதிகாரி சுசாந்தா நந்தா என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில்.,

 

 

மேலும் படிக்க | நாகப்பாம்பை குளிப்பாட்டி குஷிப்படுத்திய நபர்: அதிசய வைக்கும் வைரல் வீடியோ

குதிரை ஒன்று ஆம்புலன்ஸிற்கு பின்னாலேயே ஓடுவதை நாம் காணலாம். அந்த வீடியோவை பகிர்ந்த ஐஎஃப்எஸ் அதிகாரி சம்பவம் குறித்து விரிவாக எழுதியுள்ளார். அதன் படி., இந்த ஓடும் குதிரையின் சகோதரி குதிரைக்குக் காலில் அடிபட்டுவிட்டதால் அதை உரியச் சிகிச்சை அளிக்க விலங்குகளுக்கான ஆம்புலன்ஸில் ஏற்றி கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குக் கொண்டு செல்லும் போது அதன் சகோதர குதிரை தன் சகோதரி மீது உள்ள பாசத்தால் ஆம்புலன்ஸ் பின்னால் சுமார் 8 கிலோ மீட்டர் ஓடியே வந்துள்ளது. மருத்துவமனை வாசலுக்கு வந்த குதிரை அங்கேயே தன் சகோதரிக்குச் சிகிச்சை முடிவும் வரை காத்திருந்தது. 

இந்த நிலையில் தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வெறும் 23 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமான பார்வைகள் பெற்றுள்ள நிலையில், 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடியோவை லைக் செய்துள்ளனர். இந்த குறித்து காமெண்ட் செய்த ஒருவர் விலங்குகளுக்கு நம்மை விட அதிக உணர்வுகள் இருப்பதாக பதிவிட்டுள்ளார். 

மேலும் படிக்க | அதிசய விளக்கும் சேட்டை அணிலும் - வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News