பாம்பால் அடித்து சண்டை... நம்ப முடியாத சீன்ஸ்: வைரல் வீடியோ

Fight Video: இப்படி ஒரு சண்டையை நீங்கள் கண்டிப்பாக பார்த்திருக்க முடியாது. தலை சுற்ற வைக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 16, 2023, 12:24 PM IST
  • சண்டை போட்டுக்கொண்டு இருக்கும்போது, திடீரென ஒருவர் ஒரு பாம்பை வெளியே எடுக்கிறார்.
  • பின்னர் அந்த பாம்பினால் எதிராளியை அடிக்கத் தொடங்குகிறார்.
  • ஒரு பெல்ட் கொண்டு அடிப்பது போல அவர் அந்த பாம்பை வைத்துக்கொண்டு மற்றொரு நபரை அடிக்கிறார்.
பாம்பால் அடித்து சண்டை... நம்ப முடியாத சீன்ஸ்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் நம் அன்றாட வாழ்வில் நடக்கும் பல சம்பவங்களின் வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. மனிதர்களுக்கு இடையிலான அன்பு, பாசம், சண்டை, கோவம் என இவை அனைத்தும் இவற்றில் காணப்படுகின்றன. இருவர் சண்டையிட்டுக்கொள்ளும் போது, ஒருவரை ஒருவர் உதைப்பது, குத்துவது மட்டுமின்றி, கொம்பு, தடி மற்றும் ஆயுதங்களுடனும் சண்டையிடுவது சகஜம். இப்படிப்பட்ட சண்டை வீடியோக்கள் தினமும் சமூக வலைதளங்களில் பல வைரலாகி வருகின்றன. 

ஆனால் தற்போது வெளிவந்துள்ள வீடியோவில் மிக வித்தியாசமான ஒரு விஷயத்தை காண முடிகின்றது. இதை பார்த்தால் நம்மால் வாய் பிளந்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது. இந்த வீடியோவில், நடுரோட்டில் இரு நபர்கள், ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு சண்டை போடுவதை காண முடிகின்றது. ஆனால், திடீரென அப்போது நடக்கும் ஒரு விஷயம் நமக்கு ஆச்சரியத்தை வரவழைக்கிறது. 

சண்டை போட்டுக்கொண்டு இருக்கும்போது, திடீரென ஒருவர் ஒரு பாம்பை வெளியே எடுக்கிறார். பின்னர் அந்த பாம்பினால் எதிராளியை அடிக்கத் தொடங்குகிறார். ஒரு பெல்ட் கொண்டு அடிப்பது போல அவர் அந்த பாம்பை வைத்துக்கொண்டு மற்றொரு நபரை அடிக்கிறார். 

அந்த நபரின் கைகளில் பாம்பு இருப்பதைக் கண்டு, எதிரில் இருப்பவர் மிகவும் பதற்றமடைந்து, அந்த இடத்தை விட்டு ஓடத் தொடங்குகிறார். இந்த விவகாரம் பற்றி யாரோ காவல்துறைக்கு தகவல் சொல்ல, சரியான நேரத்தில் அங்கு காவல்துறை வண்டியும் வருவதை வீடியோவில் காண முடிகின்றது. 

பாம்பை பெல்ட் போல பயன்படுத்தி அடித்த நபர் 

வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஏதோ ஒரு விஷயத்துக்காக இருவர் மோதிக்கொள்வதைக் காண முடிகின்றது. இருவரும் நடுரோட்டில் அடித்து உதைத்துக்கொள்ள ஆரம்பித்தனர். சில நேரம் கழித்து இந்த சண்டையில் காணப்படும் ஒரு விஷயம் நம் மனதை உலுக்கும் வண்ணம் உள்ளது. சண்டைக்கு நடுவில், ஒருவர் திடீரென ஒரு பாம்பை வெளியே எடுத்து, அதை ஒரு அடிக்கும் தடியைப் போல பயன்படுத்தத் தொடங்குகிறார். பிரம்பால் ஆடிப்பதைப் போல அவர் தன் எதிராளியை பாம்பால் அடிக்கிறார். சரியாக சொல்ல வேண்டுமானால், அவர் பாம்பை ஒரு பெல்ட் போல பயன்படுத்தி அடிக்கிறார் என்றே கூற வேண்டும். 

மேலும் படிக்க | 12 அடி நீளமுள்ள ராஜ நாகப்பாம்பை முத்தமிடும் நபர்

பாம்பைப் பார்த்து மற்றவர் திகிலடைகிறார். இதற்கிடையில் யாரோ போலீசுக்கு தகவல் அளிக்க, போலீசார் வந்து இருவரையும் அப்புறப்படுத்தினர். இந்த நேரத்தில் பாம்பு சாலையில் விழுந்து அங்கிருந்து ஊர்ந்து செல்லத் தொடங்கியது. இந்த சம்பவம் டொரோண்டோவில் நடந்ததாக கூறப்படுகிறது.

ட்விட்டரில் வைரலான வீடியோவை இங்கே காணலாம்: 

பாம்புடன் இருந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 45 வயதான லாரேனோ அவிலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். கனடாவின் டொரன்டோவில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது @crazyclipsonly என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதனுடன், ‘தெருச் சண்டையில் பாம்பை ஆயுதமாக பயன்படுத்திய நபர்’ என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ளது. 

இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறர்கள். இந்த வீடியோவில், ‘விலங்கை சித்ரவதை செய்ததற்காக அவரை கைது செய்யுங்கள்' என்று ஒருவர் கமெண்ட் வந்துள்ளார். இதுவரை அந்த வீடியோ 15 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. மேலும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. மேலும் 47 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்த வீடியோவை லைக் செய்துள்ளனர். 

மேலும் படிக்க | இயற்கை அதிசயங்கள்... அழகாய் கூடு கட்டும் குருவி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News