பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் குருஷேத்ரா trailer!

மகாபாரதம் புராணக்கதையை அடிப்படையாக வைத்து பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கிய 'குருஷோத்திரா'. இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 8, 2019, 05:48 PM IST
பிரம்மாண்டங்களின் பிரம்மாண்டமாய் குருஷேத்ரா trailer! title=

மகாபாரதம் புராணக்கதையை அடிப்படையாக வைத்து பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கிய 'குருஷோத்திரா'. இத்திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது!

புராணக்கதையான மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து பிரபல கன்னட இயக்குநர் நாகன்னா இயக்கிய 'குருஷோத்திரா' என்னும் திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இதில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷ்ன் கிங் அர்ஜுன் கர்ணனாகவும் நடிகை ஸ்னேகா திரௌபதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துரியோதணனை கதாநாயகனாக காட்டும் இந்த திரைப்படத்தில் தர்‌ஷன் துரியோதணனாக நடித்துள்ளார். வி.ரவிச்சந்திரன் கிருஷ்ணராகவும், பீஷ்மராக அம்பரீஷ் , சோனு சூத் அர்ஜுனனாகவும் நடித்துள்ளனர். நிகில் குமார், பி.ரவி ஷங்கர், ஹரிப்பிரியபா, பாரதி விஷ்ணுவர்தன், மேக்னா ராஜ், பிரக்யா ஜெய்ஸ்வால், ரம்யா நம்பீசன், அனசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நாகன்னா இயக்கியிருக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளம் என நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் ட்ரைலரினை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Trending News