குரங்குக்கு கொழுப்பு பாத்தீங்களா..பாவம் அந்த 'பாப்பா': வீடியோ வைரல்

Monkey Viral Video: இதில், குரங்குக்கு உணவு கிடைக்காமல், பெண் குழந்தையை தண்டிக்க சென்ற விதத்தை பார்க்கலாம். இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 24, 2023, 02:19 PM IST
  • குரங்கு, நாய், பூனை, யானை ஆகியவற்றின் வீடியோக்கள் மிக அதிகமாக வைரல் ஆகின்றன.
  • தற்போது ஒரு குரங்கின் வீடியோ வெளிவந்துள்ளது.
  • இன்றைய வைரல் வீடியோ.
குரங்குக்கு கொழுப்பு பாத்தீங்களா..பாவம் அந்த 'பாப்பா': வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 

குரங்கு, நாய், பூனை, யானை ஆகியவற்றின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிக அதிகமாக வைரல் ஆகின்றன. தற்போதும் ஒரு நாய்க்குட்டி மற்றும் குரங்குக்கு இடையேயான மோதலின் வீடியோ வெளிவந்துள்ளது. இதில் இரு மிருகங்களின் நடவடிக்கைகள் பார்க்க மிக வேடிக்கையாக உள்ளன. 

மேலும் படிக்க | முதலையை மூச்சுத் திணற வைத்து விழுங்கிய பைதான்: வைரல் வீடியோ

இந்த  வீடியோவில் சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றுக்கொண்டு இருப்பதை காணலாம். அப்போது வழியில் ஒரு குரங்கின் பார்வை அவர்கள் மீது படுகிறது. அந்த குரங்கு உடனடியாக அவர்களிடம் ஓடி உணவு எதேனும் இருக்கா என்று தேடுகிறது. உணவு இல்லை என்று அறிந்த அந்த குரங்கு கடுப்பில் அங்கிருந்த சிறுமியின் முடியை இழுத்தது. இதனால் வலி தாங்க முடியாமல் அந்த சிறுமி அழத் தொடங்க, குரங்கு அங்கிருந்து ஓடியது.

குரங்கின் வீடியோவை இங்கே காணுங்கள்:

இந்த வீடியோ டிவிட்டர் @IamSuVidha என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி இணையவாசிகள் பலர் இந்த வீடியோவுக்கு தங்களது கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு ஏகப்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | கண்ணை கசக்கும் யானை... இப்படி செய்யக்கூடாது செல்லக்குட்டி - க்யூட் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News