Video: விடுமுறை நாளை கொண்டாடும் டோனி-யின் குடும்பம்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சிறந்த குடும்ப தலைவரும் கூட. மைதானத்தில் பிஸியாக இல்லாத நேரத்தில் மிகவும் பிஸியாக தன அழகிய குடும்பத்துடன் நேரத்தை கழிப்பவர்!

Last Updated : Mar 13, 2018, 04:28 PM IST
Video: விடுமுறை நாளை கொண்டாடும் டோனி-யின் குடும்பம்! title=

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணி தலைவர் சிறந்த குடும்ப தலைவரும் கூட. மைதானத்தில் பிஸியாக இல்லாத நேரத்தில் மிகவும் பிஸியாக தன அழகிய குடும்பத்துடன் நேரத்தை கழிப்பவர்!

இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெறும் முத்தரப்பு டி20 தொடர் கொழும்புவில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் நான்காவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மீண்டும் இரண்டாவது முறையாக நேற்றைய தினம் சந்தித்தது. இப்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இத்தொடரில் முன்னணி வீரர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வீரர்கள் தங்களது சொந்த வேலைகளில் சற்று பிஸியாகவே இருக்கின்றனர். சமீபத்தில் அணி தலைவர் விராட் கோலி தனது உடம்பில் tattoo வரைந்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் முன்னாள் அணி தலைவர் டோனி தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் வீடியோ ஒன்றினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தினில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது ரிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

 

Fun time with the family

A post shared by @ mahi7781 on

இந்த இடைவேளைகளுக் பிறகு அனைத்து வீரர்களும், வரவிருக்கும் IPL 2018 தொடரில் பங்கேற்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகள் இடை கால தடைக்கு பின்னர் களமிறங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைவராக டோனி விளையாட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Trending News