வைரல் வீடியோ: இன்றைய உலகில், சமூக ஊடகங்கள் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்து உள்ளன. இணையம் ஒரு தனி உலகமாக இயங்கி வருகிறது. இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே வலுவான பிணைப்பு உள்ளது. இதை எடுத்துக்காட்டும் பல வீடியோக்கள் அடிக்கடி சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. பாம்பு, நாய், பூனை, குரங்கு, யானை ஆகிய மிருகங்கள் சமூக ஊடகங்களின் ஹீரோக்கள் என்றே சொல்லலாம். அதுவும் குரங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தையே குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் வகையில் இருக்கும்.
ஆனால் அப்படிப்பட்ட குரங்குகளுக்கும் ஒரு வித அமைதி, ஓய்வு தேவைப்படுகின்றது. அந்த அமைதியை சில சமயம் மனிதர்களும் அளிக்கிறார்கள். இதை எடுத்துக்காட்டும் வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் நம் கண்களையே நம்ப முடியாது.
ஒரு மனிதன் குரங்கின் தலையை மெதுவாகத் தட்டி மசாஜ் செய்யும் வீடியோ இணையத்தில் புயலை கிளப்பியுள்ளது. இதில் வரும் காட்சிகள் மனதைக் கவரும் வகையில் உள்ளன. அந்த நபர் குரங்கின் தலையை நிதானமாகத் தடவி மசாஜ் செய்கிறார். குரங்கும் அதை ஆனந்தமாக அனுபவிக்கிறது. அவரது மசாஜ் அதற்கு நிம்மதியை அளிக்கின்றது என்பதை அதன் முகத்தின் பாவங்கள் மூலம் புரிந்துகொள்ள முடிகின்றது.
அந்த நபர் குரங்கின் தலையை தடவி மசாஜ் செய்ய, அதை ஆனந்தமாக அனுபவிக்கும் குரங்கு அப்படியே சிறிது நேரம் தூங்குகிறது. சிறிது நேரம் கழித்து, அந்த நபர் மசாஜ் செய்வதை நிறுத்துகிறார். அதையடுத்து சடார் என விழித்துக்கொண்ட குரங்கு 'ஏன் நிறுத்தி விட்டாய்? எனக்கு இன்னும் மசாஜ் வெண்டும்' என்பது போல பார்க்கிறது.
மசாஜை அனுபவித்த குரங்கு:
இணையத்தில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், அந்த நபர் குரங்கின் தலையை ஆசையாக தடவுவதையும் மெதுவாகத் தட்டுவதையும், குறிப்பிடத்தக்க மென்மையுடன் மசாஜ் செய்வதையும் காண முடிகின்றது. அவர் மசாஜ் செய்ய செய்ய அந்த குரங்கின் கண்கள் மெதுவாக மூடத் தொடங்குகின்றன. அந்த நபர் அளிக்கும் மசாஜ் அந்த குரங்குக்கு ஒரு நல்ல அமைதியை அளிக்கின்றது என்பதை அதன் முக பாவத்திலிருந்து புரிந்துகொள்ள முடிகின்றது. விடியோவில் குரங்கை பார்த்தால், நமக்கும் யாராவது இப்படி ஒரு மசாஜ் கொடுக்க மாட்டார்களா என்ற ஏக்கம் கூட ஏற்படுகின்றது.
சடார் என விழித்துக்கொண்ட குரங்கு
சிறிது நேரம் கழித்து, அந்த நபர் குரங்குக்கு மசாஜ் செய்வதை நிறுத்துகிறார். ஆனால் மசாஜ் நின்ற உடன் குரங்கு சடார் என விழித்துக் கொள்கின்றது. கண்களை திறந்த குரங்கு ஏமாற்றத்துடன் அந்த நபரை நோக்கி முகத்தை திருப்புகிறது. அதன் ரியாக்ஷன் காண்பதற்கு மிக வேடிக்கையாக உள்ளது. 'எனக்கு இன்னும் மசாஜ் வேண்டும்...' என கேட்பது போல அது அந்த நபரை காண்கிறது.
இந்த வீடியோ மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உருவாகக்கூடிய, தடைகளைத் தாண்டி, தூய்மையான மகிழ்ச்சியின் தருணங்களைக் கொண்டு வரக்கூடிய உணர்ச்சிகரமான தொடர்புகளின் மகிழ்ச்சிகரமான நினைவூட்டலாக உள்ளது.
குரங்கின் மசாஜ் வீடியோவை இங்கே காணலாம்:
வீடியோ வைரல் ஆனது
சமூக ஊடக தளங்களில் வீடியோ வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோ 249k -க்கும் அதிகமான லைக்குகளையும் ஏகப்பட்ட வியூஸ்களையும் பெற்றுள்ளது. இணையவாசிகள் இதற்கு ஏகப்பட்ட கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
'எத்தனை அழகான பிணைப்பு!!' என ஒரு பயனர் எழுதியுள்ளார். 'இது ஒரு மிக அழகான வீடியோ' என மற்றொரு பயனர் குறிப்பிட்டுள்ளார். 'இந்த வீடியோவை நான் மிக ரசித்தேன்' என மற்றொரு பயனர் கமெண்ட் செய்துள்ளார்.
மேலும் படிக்க | இளைஞனை சின்னபின்னமாக்கிய சுறா.. மனம் பதற வைக்கும் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ