Leopard Video: ’என்ன பிடிக்க பிளானா போடுற?’ ஆப்பிரிக்க புலிக்கு அல்வா கொடுத்த குரங்கு

குரங்கை பிடிக்க பிளான் போட்டு மரத்தின் மீது ஏறி காத்திருந்த ஆப்பிரிக்க புலிக்கு, வித்தை காட்டி விழ வைத்த குரங்கின் வீடியோ இணையத்தில் வைரலாகியிருக்கிறது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2023, 11:39 AM IST
Leopard Video: ’என்ன பிடிக்க பிளானா போடுற?’ ஆப்பிரிக்க புலிக்கு அல்வா கொடுத்த குரங்கு  title=

குரங்கு வித்தை என சொல்ல கேள்விபட்டிருப்பீர்கள். பார்த்திருக்கவில்லை என்றால், இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். வேட்டையாட வந்த புலிக்கு வித்தை காட்டி ஏமாற வைத்திருக்கிறது குரங்கு. இந்த வீடியோவை பார்க்கும்போது கடவுளுக்கே விபூதி அடிச்சவன் டா நான்...என்கிட்டியே உன்னோட தில்லாலங்கடி விளையாட்ட காண்பிக்க பார்க்குறியா? என்ற காமெடி வாசகம் நிச்சயம் நினைவில் வர தவறாது. அந்தளவுக்கு காமெடியாக இருக்கிறது இந்த வீடியோ. எப்படியாவது பிடித்துவிடலாம் என்ற ஆசையோடு சென்ற புலிக்கு, அங்கு போன பிறகு தான் தெரிகிறது ஸ்கெட்ச் புலி போடவில்லை, புலிக்கு குரங்கு போட்டிருக்கிறது என்று.

மேலும் படிக்க | பாம்பு கறி செய்த பாட்டி: இணையத்தை ஒரு கலக்கு கலக்கிய மூதாட்டி, வைரல் வீடியோ

ஆம், என்னை பிடித்துவிடலாம் இங்கே வா என அழைப்பதுபோல் ஆசை காட்டியிருக்கிறது குரங்கு. உடனே புலியும் மரத்தின் உச்சிக்கு சென்று குரங்கை பிடிக்க பிளான் போட்டுக் கொண்டிருக்கிறது. எப்படியும் தன் வேட்டையில் இருந்து குரங்கு தப்பித்துவிடக்கூடாது என்பதற்கு ஏற்ப பொறுமையாகவும் இருக்கிறது புலி. ஆனால் குரங்கு.... புலியின் ஒவ்வொரு அசைவையும் முன்கூட்டியே கணித்து வைத்துக் கொண்டு, புலி விளையாடு காணபிக்கும் வரை பொறுமையாகவே இருக்கிறது. புலிக்கு தெரியாது மரத்தின் மீது ராஜாங்கம் நடத்துவது குரங்கு தான் என்று. கிளையில் இருக்கும் ஒரு இலையை பிடித்து தாவும் வல்லமையும் சமயோசித்த புத்தியும் குரங்கிடம் எப்போதும் இருக்கும்.

அதனால் ரெடியாக இருந்த குரங்கு, புலி மிகவும் அருகாமையில் வரும் வரைக்கும் அமைதியாகவே இருக்கிறது. புலியின் சிறிய அசைவை கண்டதும், புலிக்கு கீழாக இருக்கும் கிளைகளை பிடித்து சில நொடிகளில் அங்கும் இங்கும் தாவி தாவி புலி இருக்கும் இடத்துக்கு சென்றுவிடுகிறது. ஆனால், புலி குரங்கை வேட்டையாட முயற்சித்து கடைசியில் கிளைகளைப் பிடித்து தொங்கி கீழே விழுகிறது. பின்னர் மேலே பார்க்கும்போது குரங்கு ஜாலியாக அமர்ந்து கொண்டிருக்க, ஆத்திரத்தின் உச்சத்தில் தன்னால் எதையும் செய்ய முடியவில்லையே என்ற வெறுப்பில் நின்ற கொண்டிருக்கிறது அந்த புலி. @AfricanimaIs என்ற பக்கத்தில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ ஒரு லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இப்போது வைரலாகியிருக்கிறது. 

மேலும் படிக்க | பிரபுதேவாவுக்கு டஃப் கொடுக்கும் பாட்டி: இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News