ஷப்பா.. என்னா வேல!! குரங்கு செய்யும் வேலைகள்... ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ

Funny Monkey Video: இந்த வீடியோவில் ஒரு குரங்கு செய்யும் வேலைகளை பார்த்தால் நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியாது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2023, 10:47 AM IST
  • இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் teachermalaysia என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
  • இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன.
  • இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.
ஷப்பா.. என்னா வேல!! குரங்கு செய்யும் வேலைகள்... ஆச்சரியத்தில் நெட்டிசன்ஸ்: வைரல் வீடியோ title=

வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

குரங்கு வீடியோகளுக்கென இணையத்தில் தனி கிரேஸ் உள்ளது. குரங்குகளின் கோமாளித்தனத்தையும் அவை செய்யும் சேட்டைகளையும் இணையவாசிகள் விரும்பி பார்க்கிறார்கள். சமூக ஊடகங்களில் குரங்குகளின் பல குறும்பு வீடியோக்கள் அவ்வப்போது பகிரப்படுகின்றன. குரங்குகள் செய்யும் பல வித குறும்புகளை நாம் பல வீடியோக்களில் பார்த்துள்ளோம். ஆனால் குரங்குகள் உண்மையில் மிக பொறுப்புள்ள மிருகங்கள் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

சமீபத்தில் இணையத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு வீடியோவில் ஒரு குரங்கின் நடவடிக்கைகளை கண்டு இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். குரங்குகளுக்கு நம்மை தொந்தரவு செய்யவும், நம்மிடம் இருந்து பொருட்களை பிடுங்கவும் மட்டும்தான் வரும் என நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். ஆனால் சரியான பயிற்சி கொடுத்தால் அது மனிதர்களை தோற்கடிக்கும் அளவிற்கு பல வித செயல்களை செய்யும் என்பதற்கு இந்த வீடியோ ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது. சரியான முறையில் வழிநடத்தப்பட்டால் இவை மனிதர்களுக்கு பல விதங்களில் உதவியாக இருக்கின்றன என்பதை இதை பார்த்து நம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது.

குரங்கு செய்யும் கியூட் வேலைகள் 

இந்த வைரலான வீடியோவில், ஒரு பெண் தனது குழந்தையை குளிப்பாட்டி, தூங்க வைப்பதை காண முடிகின்றது. வீடியோ முழுவதும் குரங்கு ஒன்று அந்த பெண்ணுக்கு பல விதங்களில் உதவி செய்கிறது. குழந்தையை பெண் குளிப்பாட்டும் போது, அவர் குரங்கிடம் ஷேம்பூ எடுத்து வர சொல்கிறார். குரங்கும் அவ்வாறே செய்கிறது. பின்னர், அது ஹேண்ட் ஷவர் கொண்டு குழந்தை மீது நிதானமாக தண்ணீரை விடுகிறது. பின், பெண் குழந்தைக்கு ஆடை அணிவிக்கும் போது அது அனைத்து பொருட்களையும் எடுத்து வந்து பெண்ணின் கையில் அழகாக கொடுக்கிறது.

மேலும் படிக்க | தானம் செஞ்சவங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி! க்யூட்டாய் நன்றி சொல்லும் சிம்பன்சி

இறுதியாக குழந்தையை தூங்க வைக்க தொட்டிலை ஆட்டுகிறது. அந்த பெண் குரங்கிற்கு உண்ண சிப்ஸ் பாக்கெட் தருகிறார். உண்ட பிறகு அந்த பாக்கெட்டையும் அது மிக பொறுப்பாக குப்பைத் தொட்டியில் போடுகிறது. அந்த பெண்ணும் குரங்கிடம் மிக பாசமாக நடந்துகொள்கிறார். மடியில் குழந்தையை வைத்துக்கொண்டு ஒரு கையால் அவர் குரங்கின் தலையை பாசமாக தடவி விடுவதை வீடியோவில் காண முடிகின்றது.

அட்டகாசமான அந்த வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 (@teachermalaysia)

இணையத்தில் வீடியோ வைரல் ஆனது

இந்த வீடியோ சமூக ஊடக தளமான இன்ஸ்டாகிராமில் teachermalaysia என்ற பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதற்கு ஏகப்பட்ட வியூஸ்களும் லைக்குகளும் கிடைத்து வருகின்றன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். சிலர் குரங்கை பாராட்டினாலும், சிலர் மனிதர்கள் இப்படி அப்பாவி மிருகங்களை தங்கள் நலனுக்காக பயன்படுத்துவது தவறு என விமர்சித்துள்ளனர். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | இடி மின்னலை பார்த்திருக்கலாம்! ஆனா, இப்படி எரிமலையே இடிச்சு பார்த்ததுண்டா? வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News