Mice In Laddu Packet Viral Video: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதத்தில் லட்டு பிரசாதத்தை தயாரிக்கப்பட்ட பயன்படுத்த நெய்யில் மாட்டுக் கொழுப்பு, பன்றிக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலந்திருப்பதாக ஆய்வு முடிவில் தகவல் வெளியானது. இதனால், நாடு முழுவதும் பக்தர்கள் இடையே கடும் அதிர்ச்சி ஏற்பட்ட நிலையில், அரசியல் ரீதியாகவும் பரபரப்பு உண்டாகி உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, திருப்பதி லட்டில் குட்கா பாக்கெட் மற்றும் சிகரெட் துண்டு இருந்ததாக நேற்று தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆனால், இந்த கூற்று முற்றிலும் போலியானது எனவும் குட்கா பாக்கெட் எதுவும் பிரசாதத்தில் இருந்து கண்டெடுக்கப்படவில்லை என திருமலை திருப்பதி தேவஸ்தானம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் லட்டு தயாரிக்கும் இடத்தை 24x7 நேரமும் கேமரா மூலம் கண்காணிக்கிறோம் என்றும் பக்தர்கள் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
பரபரப்பை கிளப்பும் பிரசாதங்கள்
இதைபோல், பழனி முருகன் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்டதாக பிரபல இயக்குநர் மோகன் ஜி சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசியிருந்தார். இந்துக்களின் ஆண்மையை குறைக்கும் விதத்தில் இது செய்யப்பட்டதாக மோகன் ஜி கூறியிருந்த நிலையில், அவரை திருச்சி காவலர்கள் இன்று கைது செய்தனர்.
திருப்பதி லட்டு பிரச்னையொட்டி இதுபோன்ற பல விஷயங்கள் சமூக வலைதளத்தில் பரவும் நிலையில், தற்போது மும்பை சித்தி விநாயகர் கோயிலில் (Mumbai Siddhivinayak Temple) வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் பாக்கெட்டில் எலி குஞ்சுகள் இருந்ததாக கூறி, புகைப்படமும் வீடியோவும் வைரலாகி வருகிறது. இந்த வைரல் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், இதுகுறித்த உண்மைத் தன்மையை இங்கு காணலாம்.
எலி குஞ்சுக்கள் இருக்கும் வீடியோ வைரல்
வைரலாகி வரும் இந்த புகைப்படங்களிலும், வீடியோவிலும் ஒரு பிரிக்கப்பட்ட பிரசாத பாக்கெட்டின் உள்ளே சில எலி குஞ்சுகள் இருப்பதை காண முடிகிறது. இந்நிலையில், இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ குறித்து மும்பை சித்தி விநாயகர் கோயில் நிர்வாகத்தினர் இன்று மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளனர்.
கோவில் நிர்வாகம் கூறுவது என்ன?
சித்தி விநாயகர் கோவில் அறக்கட்டளையின் தலைவர் சதா சர்வாங்கர் கூறுகையில்,"இந்த பிரசாதம் சித்தி விநாயகர் கோவில் உடையது இல்லை. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்படும். இந்த கோயில் நிர்வாகம் நன்றாக செயல்பட்டு வருகிறது. பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பிரசாதங்கள் சுத்தமானது மற்றும் தூய்மையாக தயாரிக்கப்படுகிறது. இந்த லட்டுக்கள் ஆய்வகங்களில் முறையாக ஆய்வு செய்யப்பட்டு அதன்பின்னரே விநியோகிக்கப்படுகிறது" என்றார்.
இதைத் தொடர்ந்து, சித்தி விநாயகர் கோவிலின் செயல் அதிகாரி வீனா பாட்டீல் கூறுகையில்,"வைரலாகி வரும் வீடியோவிலும், புகைப்படங்களிலும் சித்தி விநாயகர் கோவில் வளாகங்கள் தெரியவில்லை. போலீஸ் உயர் அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை மேற்கொள்கின்றனர். இதுகுறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
After #TirupatiLaddu , Mumbai's famous #Siddhivinayak temple is in limelight.
Few images are being viral where Rat cubs can be seen in the Mahaprasad of the temple. On the clarification sought on these pictures, Temple Trust Secretary Veena Patil has said that these pictures… pic.twitter.com/8qGlEQzLtr
— Darshan Rana (@yours_darsh) September 24, 2024
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் விதித்துள்ள விதிகளை பின்பற்றுகிறோம். பிரசாதம் தயாரிப்பில் வெளிப்படைத்தன்மையுடன் இருக்கிறோம். மாநாகராட்சியின் விதியையும் பின்பற்றுகிறோம். லட்டுக்கள் தரமானதாக இருப்பதை நாங்களே உறுதி செய்கிறோம்" என்றாம். எனவே, தற்போது வைரலாகி வரும் வீடியோவும், புகைப்படங்களும் மும்பை சித்தி விநாயகர் கோவிலின் பிரசாதம் தானா என்பது இதுவரை உறுதிசெய்யப்படவில்லை.
மேலும் படிக்க | நாகப்பாம்பை மாலையாய் போட்ட குரங்கு: ஷாக் ஆன மற்றொரு பாம்பு... வேற லெவல் வைரல் வீடியோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ