ஆற்றைக் கடக்க சென்று அந்தரத்தில் தொங்கிய நபர்: Viral Video

ஆற்றைக் கடக்க சென்று தொங்குபாலத்தில் அந்தரத்தில் தொக்கிய நபரின் வீடியோ இணையவாசிகளை ரசிக்க வைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 4, 2022, 12:57 PM IST
ஆற்றைக் கடக்க சென்று அந்தரத்தில் தொங்கிய நபர்: Viral Video   title=

எப்போதெல்லாம் நீங்கள் மிகவும் மனச்சோர்வாக இருக்கிறீர்களோ அப்போதெல்லாம் சங்கடப்படாமல் இணையப்பக்கம் சென்றுவிடுங்கள். அங்கு உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நல்ல விஷயங்கள் நிறைய இருக்கின்றன. மனச்சோர்வு இருக்கும் இடம் தெரியாமல் சென்றுவிடும் அளவுக்கு உங்களை அதில் இருந்து மீட்கும் மகிழ்ச்சி மாத்திரைகள் கொட்டிக் கிடக்கின்றன. இதற்காக நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக் மற்றும் யூ டியூப் பக்கத்துக்கு செல்ல வேண்டியது மட்டும் தான். 

சிரிப்பு அடக்க முடியாத அளவுக்கு உங்களை மறந்து சிரிக்கும் வீடியோ எல்லாம் இருக்கின்றன. அப்படியான வீடியோ ஒன்று இணையவாசிகளின் கண்ணில் பட்டு, அவர்கள் மெய்மறந்து பார்த்து சிரித்து கொண்டிருக்கின்றன. என்ன வீடியோ என்னவென்றால், ஆறு ஒன்றின் குறுக்கே தொங்கு பாலம் ஒன்று இருக்கிறது. மரத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்த பாலத்தில் ஏறி, ஒருவர் கடக்க முயற்சி செய்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக பாலத்தில் தவறி விழுந்து, கயிற்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கிறார். 

இந்தக் காட்சி காண்போருக்கு நகைப்பை ஏற்படுத்திவிடுகிறது. ஆனால் இதோடு இந்த வீடியோ முடிவதில்லை. இதன்பிறகும் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. அதாவது, அந்த தொங்கு பாலத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் நபரை காப்பாற்ற ஒருவர் செல்கிறார். அவர், அவரை காப்பாற்றிவிட்டு, கீழே விழுகிறார். இது இன்னும் நகைப்பை ஏற்படுத்துகிறது. இந்த வீடியோ, டிவிட்டரில் மட்டும் 50 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது.

மேலும் படிக்க |  Viral Video: அப்படி என்ன தான் சாப்பிட்டீங்க சார்... போதையில் ‘தள்ளாடும்’ அணில்!

மேலும் படிக்க | Viral Video: ‘குட்டிக்கரணம்’ போடும் புறா; இணையவாசிகளை சொக்க வைத்த வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News