Viral: எருமை மாட்டிற்கு பிறந்தநாள் கொண்டாடிய மனிதர் மீது காவல் துறை வழக்கு பதிவுசெய்தது ஏன்?

கிரண் மத்ரே என்ற 30 வயதான அந்த நபர், வியாழக்கிழமை டோம்பிவலி பகுதியில் உள்ள ரெட்டி பண்ணில் தனது வீட்டில் எருமை மாட்டின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 13, 2021, 11:42 AM IST
  • மகாராஷ்டிராவிலிருந்து ஒரு வினோதமான வழக்கு பற்றி தெரிய வந்துள்ளது.
  • மகாராஷ்டிராவில் ஒருவர் தனது வீட்டில் எருமை மாட்டின் பிறந்த நாளைக் கொண்டாடினார்.
  • இதற்கு பல விருந்தினர்களையும் அழைத்திருந்தார்.
Viral: எருமை மாட்டிற்கு பிறந்தநாள் கொண்டாடிய மனிதர் மீது காவல் துறை வழக்கு பதிவுசெய்தது ஏன்? title=

தானே: நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களில் மீண்டும் லாக்டௌன் விதிக்கப்பட்டு வருகின்றது. பயண கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு வருகின்றன.

பழைய படி, மக்கள் கோவிட் விதிமுறைகளை முழுமையாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நிலையில், மகாராஷ்டிராவிலிருந்து (Maharashtra) ஒரு வினோதமான வழக்கு பற்றி தெரிய வந்துள்ளது.  பரவி வரும் தொற்றுக்கு மத்தியில் கோவிட் -19 விதிமுறைகளை மீறியதற்கான ஒரு வினோதமான வழக்கில், மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் காவல்துறையினர் வெள்ளிக்கிழமை ஒரு வழக்கை பதிவு செய்தனர். எருமையின் ‘பிறந்தநாளை’ கொண்டாடியதாகக் கூறப்படும் ஒரு நபருக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தனர்.

கிரண் மத்ரே என்ற 30 வயதான அந்த நபர், வியாழக்கிழமை டோம்பிவலி பகுதியில் உள்ள ரெட்டி பண்ணில் தனது வீட்டில் எருமை மாட்டின் பிறந்த நாளைக் கொண்டாடுவதற்காக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறப்படுகிறது. பலர் அந்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாவட்டத்திலும் மாநிலத்திலும் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வரும் நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசமும் அணியவில்லை என்றும் தனி மனித இடைவெளியையும் பின்பற்றவில்லை என்றும் விஷ்ணு நகர் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ALSO READ: Watch: போங்காட்டம் ஆடிய Pollard, சர்ச்சையைக் கிளப்பிய ‘out’: Viral ஆகும் வீடியோ

ஐபிசி பிரிவு 269 இன் கீழ் (உயிருக்கு ஆபத்தான நோய்த்தொற்று பரவ வாய்ப்பு) ஒரு வழக்கும் தொற்றுநோய் சட்டமும் அவருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டது. இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதற்கிடையில், மகாராஷ்டிரா கொரோனாவின் ஹாட் ஸ்பாட் ஆக மாறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் புதிய பாதிப்புகளும் 56 மரணங்களும் பதிவாகியுள்ளன.

கோவிட் -19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  

கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் பரவும் வேகத்தை அதிகரித்துள்ளது பல்வேறு கவலைகளை அதிகரித்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்த சில நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவும், லாக்டவுனும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

ALSO READ: COVID-19 பாதிப்பு அதிகரிப்பதால் இந்தியாவின் பல நகரங்களில் இரவு ஊரடங்கு அமல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News