சட்டத்தை மீறிய முதல்வரின் மனைவி; நடவடிக்கை எடுக்குமா அரசு!

மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி, பாதுகாப்பு எல்லை மீறி கப்பலின் முனையில் அமர்ந்து செல்பி எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

Last Updated : Oct 21, 2018, 04:55 PM IST
சட்டத்தை மீறிய முதல்வரின் மனைவி; நடவடிக்கை எடுக்குமா அரசு! title=

மகாராஷ்டிர மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மனைவி, பாதுகாப்பு எல்லை மீறி கப்பலின் முனையில் அமர்ந்து செல்பி எடுத்த விவகாரம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

மும்பை கடல் பகுதியில் இந்தியாவின் முதல் உள்நாட்டு சொகுசு கப்பல் போக்குவரத்து இன்று துவங்கப்பட்டது. இந்த கப்பல் போக்குவரத்தினை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த தொடக்க விழாவுக்கு தேவேந்திர பட்னாவிஸ் உடன் அவரது மனைவி அம்ருதா பட்னாவிஸ் சென்றிருந்தார். அப்போது அம்ருதா பட்னாவிஸ் பாதுகாப்பு எல்லையை தாண்டி கப்பலின் விளிம்பு பகுதியில் அமர்ந்து கொண்டு செல்பி எடுத்துள்ளார். 

பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்படுத்தாமல் அவர், தொடர்ந்து அங்கேயே அமர்ந்து செல்பி எடுத்துள்ளார். இந்த சம்பவத்தில் வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Trending News