11 மணிநேரத்திற்கு பிறகு திருப்பதி கோவில் நடை திறப்பு!

இந்நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட அரிய கிரகணம் நேற்று இரவு இந்தியாவில் தெரிந்தது!

Last Updated : Jul 28, 2018, 10:25 AM IST
11 மணிநேரத்திற்கு பிறகு திருப்பதி கோவில் நடை திறப்பு! title=

இந்நூற்றாண்டின் மிக நீண்ட நேரம் கொண்ட அரிய கிரகணம் நேற்று இரவு இந்தியாவில் தெரிந்தது!

நள்ளிரவு 11.54 மணியளவில் தொடங்கிய இந்த சந்திர கிரகணம் இன்று அதிகாலை 2.43 மணி வரை நீடித்தது. இந்த சந்திர கிரகணத்தைக் காண சென்னை பிர்லா கோளரங்கத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு நிகழ்ந்த இந்த சந்திரகிரகணத்தை, வடமாநிலங்களில் பல்வேறு நகரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். 

இந்த கிரகணத்தின் போது நிலவின் வெளிச்சம் குன்றி, சிவப்பு நிறத்தில் காட்சியளித்துள்ளது. முன்னதாக கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் ஏற்பட்டது. இதையடுத்து நேற்று நடப்பு நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணம் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி கோவில் நடை 11 மணி நேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் அர்ச்சகர்கள் கருவறை முதல் கோயிலுக்குள் உள்ள சன்னதி கதவுகள் வரை அடைக்கப்பட்டது. இன்று விடியற்காலை கிரகணம் முடிவடைந்ததை அடுத்து இன்று காலை 4 மணியளவில் மீண்டும் நடை திறக்கப்பட்டது.

Trending News