Lionfish: மனிதன் உயிரை குடிக்கும் விஷம் நிறைந்த ஆபத்தான மீன்..!!!

பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் சில மீன்கள், மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை என்றால் நம்ப முடிகிறதா. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 30, 2021, 02:04 PM IST
  • பிரிட்டனில் முதல் முறையாக லயன்ஃபிஷ் தென்பட்டது
  • இந்த மீன் கடித்த மனிதன் இறக்கும் ஆபத்து உள்ளது.
  • பக்கவாதமும் ஏற்படும் அபாயம் உள்ளது.
Lionfish: மனிதன் உயிரை குடிக்கும் விஷம் நிறைந்த ஆபத்தான மீன்..!!! title=

பார்ப்பதற்கு சிறிய அளவில் இருந்தாலும் சில மீன்கள், மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தானவை என்றால் நம்ப முடிகிறதா.  இந்த மீன்கள்  கடித்தால் பக்கவாதம் ஏற்பட்டு சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு மீன் பிரிட்டனின் கடற்கரையில் முதல் முதலாக காணப்பட்டது. அது லயன்பிஷ் ஆகும். 

முதல் முறையாக தென்பட்ட மீன்
மனிதர்களுக்கு பக்கவாதத்தை  ஏற்படுத்தும் அல்லது  கொல்லும் வகையிலான விஷம்  கொண்ட லயன்பிஷ் பிரிட்டனின் கடற்கரையில் முதன்முறையாகக் காணப்பட்டன. இதில் ஆபத்தான விஷயம் என்னவென்றால், சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும்  இடத்தில் காணப்பட்டது. தி சன் செய்திகளின்படி, 39 வயதான அர்ஃபான் சம்மர்ஸ் 6 அங்குல லயன்பிஷ் என்ற மீனை பிடித்தார். இது விஷத்தால் நிறைந்த 13 முதுகெலும்புகளைக் கொண்டுள்ளது.

ALSO READ | அதிசயம்! இறந்த 45 நிமிடத்திற்கு பின் ‘உயிர்த்தெழுந்த’ பெண்..!! 

லயன்ஃபிஷ் எங்கே காணப்படுகிறது?
தெற்கு பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலில் இந்த வகை மீன்கள் காணப்படுகின்றன, ஆனால் புவி வெப்பமடைதல் காரணமாக, அவை இப்போது மத்திய தரைக்கடல் கடல் பகுதியிலும் பரவலாக காணப்படுகின்றன. இந்த மீன்கள் ,  கடல் வாழ் உயிரினங்களுக்கும் பெரும் தீங்கு விளைவிக்கும்.  இந்த வகை மீன் இத்தாலியில் இருந்து பிரிட்டனை அடைந்ததாக கடல் உயிரியலாளர்கள் கூறுகின்றனர்.

ALSO READ | Viral Photos: மலைப்பாம்பு இரத்த வாந்தி எடுப்பதை பார்த்திருக்கிறீர்களா..!!! 

மிகவும் ஆபத்தான மீன் 
லயன்ஃபிஷ் நீளம் 5 செமீ முதல் 45 செமீ வரை இருக்கும். 1.5 கிலோ வரை இருக்கும். இது மிகவும் நச்சுத் தன்மையை கொண்டுள்ளது. இது கடித்தால், வலியால் துடித்து போவார்கள். இது கடித்தால் கடுமையான வலி, மூச்சுத் திணறல், வாந்தி ஆகியவை ஏற்படுகிறது. இந்த மீன் கடித்தால் பக்கவாதம் கூட ஏற்படலாம், சில சமயங்களில் மரண அபாயமும் உள்ளது.

ALSO READ | விஞ்ஞானிகளுக்கும் புதிராக உள்ள பங்களாதேஷின் அதிசய சிவன் கோவில்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News