‘பலவான் வாழ்வான்! பலவீனன் வீழ்வான்’ வைரலாகும் சிங்கத்தின் இரை வேட்டை வீடியோ

Animal Viral Video: காட்டின் ராஜா சிங்கம் என்று சொல்வதற்கு காரணம் என்ன என்பதை உணர்த்தும் வைரல் வீடியோ! ‘பலவான் வாழ்வான்! பலவீனன் வீழ்வான்’ வைரலாகும் சிங்கத்தின் இரை வேட்டை வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2022, 05:22 PM IST
  • சிங்கத்தின் சீற்றமான இரை வேட்டை
  • கன்றுக்குட்டியை லாவகமாக வேட்டையாடும் சிங்கம்
  • இரையை பங்குப் போட்ட வந்த நண்பேண்டா சிங்கம்
‘பலவான் வாழ்வான்! பலவீனன் வீழ்வான்’ வைரலாகும் சிங்கத்தின் இரை வேட்டை வீடியோ title=

வைரல் வீடியோ:  ஊடகங்களில் செய்தி மட்டுமே பிரதானமாக இருந்த காலகட்டங்கள் மாறிவிட்டன. அச்சு ஊடகம், தொலைகாட்சி, வீடியோ, டிஜிட்டல், மொபைல் என செய்தி ஊடகங்களும் காலத்திற்கு ஏற்ப பரிணாம வளர்ச்சி அடைந்து வருகின்றன. அதிலும், தற்போது அனைவரின் கைகளிலுமே உலகம் அடங்கிவிட்டது என்று சொல்லும் அளவுக்கு, மொபைல் போன்களின் வீச்சு இருக்கிறது. மொபைல் போன்களின் வீச்சினால், சமூக ஊடகங்களில் உடனுக்குடன் செய்திகள் வந்துவிடுகின்றன. அதிலும் வீடியோ செய்திகள் அதிகமாக விரும்பப்படுகின்றன. நாட்டு நடப்பு, செய்திகள், ஃபேஷன், கல்வி உட்பட பல விஷயங்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்கிறோம். இணையத்தில் நாம் பார்க்கும் பல வித வீடியோக்களில், சில பரவசப்படுத்தினாலும் பல பயப்படுத்துகின்றன. சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்களில் மிருகங்களின் வித்தியாசமான வீடியோக்களை பார்த்து பரவசப்படுவதற்க்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

விலங்குகளின் வீடியோக்கள் அனைவராலும் பார்த்து விரும்பி ரசிக்கப்படுகின்றன என்பதற்கான காரணம் என்னவாக இருக்கும்? யோசித்துப் பார்த்தால், இயல்பான வாழ்க்கையில் நாம் காண முடியாத பல விஷயங்களாக இருப்பது புரியும். நேரிலோ அல்லது கனவிலோ கூட நினைத்துப் பார்க்க முடியாத விலங்குகளின் அரிய தருணங்களின் வீடியோக்கள் வைரலாகின்றன. விலங்குகளின் குறும்புத்தனமும் அப்பாவித்தனமும் இருக்கும் வீடியோக்களும் வைரலாகின்றன. 

மேலும் படிக்க | சிங்கிளாக வந்து சிங்கக்கூட்டத்தை சிதறடிக்கும் ஆக்ரோஷமான விலங்கு 

ஆனால் காட்டு விலங்குகள் வீடியோ என்றால் அவை பெரும்பாலும் அச்சமூட்டுவதாகவே இருக்கின்றன. பலம் வாய்ந்த விலங்கு, தனது இரைக்காக, பலவீனமான விலங்கை வேட்டையாடுவது அனைவருக்கும் தெரிந்தது என்றாலும், இப்படிப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. சிங்கத்தின் தாக்குதல் உக்ரமாக இருந்ததால், கன்றுக்குட்டியால் தப்பி ஓட முடியவில்லை.

சமூக ஊடகங்களில் வைரலாகும் இந்த வீடியோவில், ஆசுவாசமாக நடந்து வரும் எருமையின் குட்டி, நிதானமாக சாலையோரத்தில் நடக்கிறது. திடீரென பாய்ந்து வந்த சிங்கம் ஒன்று கொடூரமாக தாக்குகிறது. திடீர் தாக்குதலை எதிர்பார்க்காத கன்றுக் குட்டி சுலபமாக சில நொடிகளில் சிங்கத்தின் கூர்மையான நகத்தால் கிழிபடுகிறது.

மேலும் படிக்க | என்னை பிளான் பண்ணி சிக்க வைச்சிட்டீங்களே! சீறும் முதலையை வேட்டையாடும் இளைஞர்

சீறும் சிங்கத்தின் தாக்குதலில் தீனமாக அலறி சாயும் கன்றை உண்ன, சிங்கத்தின் மற்றொரு கூட்டாளியும் வந்துவிடுகிறது. இரு சிங்கங்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகிறது கன்றுக் குட்டி. ஒன்றும் செய்யமுடியாமல் அப்படியே வீழ்ந்த நிலையில் இருக்கும் கன்றுக்குட்டியை யாரால் காப்பாற்ற முடியும்? சமூக வலைதளங்களில் வைரலாகிறது. வைரல் வீடியோ உங்களுக்காக...

சிங்கங்கள் மிகவும் வீரியமான தாக்குதல் நடத்தும்போது, அவற்றை யாராலும் எதிர்கொள்ள முடிவதில்லை. நமது வாழ்க்கைக்கும், காட்டு விலங்குகளின் வாழ்க்கைக்கும் உள்ள பல வித்தியாசங்களில் முக்கியமானது என்றும் சொல்லலாம் அல்லது ஒற்றுமையானது என்றும் சொல்லலாம் என்று சொல்லக்கூடிய ஒரே பழமொழி: ‘பலவான் வாழ்வான்! பலவீனன் வீழ்வான்’

மேலும் படிக்க | பாய்ந்து வந்து கட்டிக்கொண்ட பெண் சிங்கம்: பாசமா, பகையா? வியக்க வைக்கும் வைரல் வீடியோ

விலங்குகளின் தாக்குதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பதைக் காட்டும் இந்த வீடியோவில், திடீரென எதிர்பாராத நேரத்தில் ஓடிச் சென்று தாக்கும் சிங்கத்தின் சீற்றம் அச்சத்தைக் கொடுக்கிறது.

இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி சக்கைப்போடு போடுகின்றன. துள்ளியோடும் மானாலும் சிங்கத்தின் வேகத்திற்குக் ஈடு கொடுத்து ஓட முடியவில்லை.

மேலும் படிக்க | துள்ளி குதிக்கும் கன்றுக்குட்டியின் வைரல் வீடியோ! குட்டிக் கன்றின் சுட்டித்தனம்

மேலும் படிக்க | பாய்ந்து வந்து மானை தாக்கும் சிங்கம்! தப்ப முடியாமல் கதறும் காட்டு மான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News