புதுடெல்லி: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த Joe Biden அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதியாக Joe Biden வருவார் என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் கணித்து அதை சமூக ஊடகங்களிலும் சொல்லிவிட்டார் என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பிடென் (Joe Biden) வெற்றி பெற்ற பிறகு, ஆர்ச்சரின் ஆறு ஆண்டு பிந்தைய ட்வீட் வைரலாகிறது. அதுவும் கொஞ்ச நஞ்சமல்ல, எக்கச்சக்கமாக வைரலாகிறது. அதுமட்டுல்ல, Joe Biden-இன் வெற்றியுடன் இந்த டிவிட்டர் செய்தியை அனைவரும் இணைத்துப் பார்க்கிறார்கள்.
2014, அக்டோபர் 4ஆம் தேதியன்று ஜோஃப்ரா ஆர்ச்சர் ஒரு செய்தியை ட்வீட்டரில் வெளிய்ட்டார். அதில் அவர் ஒரு வார்த்தையை மட்டுமே எழுதியிருந்தார். அது, 'ஜோ' என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே.
இப்போது மக்கள் அதை Joe Biden-இன் வெற்றியுடன் தொடர்புபடுத்தி, அதை ஜோஃப்ரா ஆர்ச்சரின் கணிப்பாகப் பார்க்கிறார்கள்.
ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) ஐபிஎல் -13 (ஐபிஎல் 2020) பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறவில்லை. ஆனால் போட்டிகளில் ஆர்ச்சரின் பங்கு குறிப்பிடத்தக்கதாக இருந்தது. அவர் 14 போட்டிகளில் பங்கேற்றிருந்தார், அவற்றில் மொத்தம் 20 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (Joe Biden), குடியரசுக் கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்புடன் மோதி தோற்கடித்தார். 77 வயதான முன்னாள் துணை அதிபர் பிடென், அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவி ஏற்கவிருக்கிறார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR