Youngest Donor: கேன்சர் நோயாளிகளுக்காக தன் தலைமுடியை தானம் செய்த 2 வயது சிறுவன்

ஹேர் ஃபார் ஹோப் இந்தியாவின் நிறுவனர் பிரீமி மேத்யூவின் கருத்துப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குறைந்தது ஏழு பள்ளிகள் முடி நன்கொடை முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 5, 2021, 04:19 PM IST
  • ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஒரு இரண்டு வயது இந்திய சிறுவனின் வியக்க வைக்கும் செயல்.
  • கேன்சர் நோயாளிகளுக்காக இவர் தனது தலைமுடியை வளர்க்கிறார்.
  • இவரது சகோதரியும் தலைமுடியை தானம் செய்துள்ளார்.
Youngest Donor: கேன்சர் நோயாளிகளுக்காக தன் தலைமுடியை தானம் செய்த 2 வயது சிறுவன் title=

ஐக்கிய அமீரகத்தில் உள்ள ஒரு இரண்டு வயது இந்திய சிறுவன் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்துள்ளார். ஒரு செய்தி ஊடகத்தின் அறிக்கையின் படி, ஐக்கிய அரபு அமீரகத்தில், புற்றுநோயாளிகளுக்கு முடியை நன்கொடையாக அளித்த மிகச்சிறிய நன்கொடையாளராகியுள்ளார் அந்த சிறுவன்.

ஐக்கிய அரபு அமீரகம் (UAE) எமிரேட்ஸ் முழுவதும் மாணவர்கள் துவக்கி வைத்த முடி நன்கொடைக்கான பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்று வியாழக்கிழமை வெளியிடப்பட்ட கல்ஃப் செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்திய சிறுவனான தக்ஷ் ஜெயின் “கேன்சர் நோயாளிகளுக்காக நன்கொடையாக அளிக்க ஒரு நல்ல நீளத்தை அடையும் வரை தனது தலைமுடியை பாதுகாப்பாக வளர்த்துக் கொண்டிருக்கிறான்” என்று அவரது தாயார் நேஹா ஜெயின் கூறினார். நேஹா ராஜஸ்தானின் கோட்டாவைச் சேர்ந்தவர்.

“இப்போது எட்டு வயதாகும் என் மூத்த மகள் மிஷிகா, 2019 நவம்பரில் கேன்சர் நோயாளிகளுக்காக (Cancer Patients) தனது தலைமுடியை தானம் செய்தாள். அவரது பள்ளியில் இது குறித்த ஒரு பிரச்சாரம் நடந்தது. அவள் தலைமுடியை தானம் செய்ய விரும்பினாள். எங்களுடன் வீட்டில் அவள் அதைப் பற்றி பேசிக் கொண்டிருப்பாள். என் மகன் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். அதன்பிறகு அவனும் தன் சகோதரியைப் போலவே தலைமுடியை தானம் செய்ய விரும்புவதாக எங்களிடம் சொல்ல ஆரம்பித்தான். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. இதற்காக நான் அவனது தலைமுடியை வளர்க்கத் தொடங்கினார்” என்று நேஹா ஜெயின் கூறியதாக வளைகுடா செய்தி அறிக்கை தெரிவித்தது.

ALSO READ: கேன்சர் குறித்த சத்குருவின் செய்தி: நவீன சமூகத்தின் நோய்!

"நன்கொடைக்கு அளிக்கும் வகையில், ஒரு நல்ல நீளத்தை அடையும் வரை நாங்கள் என மகனின் தலைமுடியை வளர்த்து வருகிறோம். அவன் தனது நீண்ட கூந்தலைப் பற்றி புகார் செய்யவில்லை. என் குழந்தைகள் இந்த விஷயத்தில் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியிருக்கிறார்கள். நானும் இந்த நல்ல விஷயத்திற்காக என் தலைமுடியை தானம் செய்தேன், "என்று அவர் மேலும் கூறினார்.

ஹேர் ஃபார் ஹோப் இந்தியாவின் நிறுவனர் பிரீமி மேத்யூவின் கருத்துப்படி, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) குறைந்தது ஏழு பள்ளிகள் முடி நன்கொடை முயற்சியின் ஒரு பகுதியாக உள்ளன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தங்கள் தலைமுடியை தானம் செய்த ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த வேறு சில இந்திய மாணவர்களையும் வளைகுடா செய்தி அறிக்கை பட்டியலிட்டுள்ளது.

இதில் அனிலேக் ராம்சந்திரன் (17), அல் வர்கா உயர்நிலைப் பள்ளியின் 12 ஆம் வகுப்பு மாணவர், அல் கைலில் உள்ள ஜெம்ஸ் நியூ மில்லினியம் பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவர் சூரியவர்த் சுரேஷ்குமார் (12); எமிரேட்ஸ் இன்டர்நேஷனல் ஜுமேராவில் 8 ஆம் வகுப்பு மாணவர் தன்மய் குருபிரசாத் அத்ரேயாஸ் (12); மற்றும் ஜெம்ஸ் வின்செஸ்டரில் 7 ஆம் ஆண்டு மாணவர் ஹிதான்ஷ் ஹசித் ஷா (12) ஆகியோர் அடங்குவர்.

ALSO READ: உலகளவில் தடுப்பூசி பணியில் முதலிடத்தில் இந்தியா; 19 நாட்களில் 45 லட்சம் தடுப்பூசி ..!!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News