உகாண்டாவில் நடந்த அதிசய சம்பவத்தில் இரண்டு வயது சிறுவன் ஒரு முரட்டு நீர்யானையால் விழுங்கிய நிலையிலும் உயிர் பிழைத்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பார்வையாளர் ஒருவர் விலங்கின் மீது கற்களை வீசியதையடுத்து, நீர்யானை முழுங்கிய சிறுவனை வெளியே துப்பியது. காவல்துறையை மேற்கோள்காட்டி கேபிடல் எஃப்எம் உகாண்டா தெரிவித்துள்ளது.
சிறு குழந்தை டிசம்பர் 4 அன்று, தனது வீட்டிற்கு அருகில் உள்ள கட்வே கபடோரோ நகரில் உள்ள ஒரு ஏரியின் கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது பசியுடன் இருந்த நீர்யானை தனது பெரிய தாடைகளால் அவரைப் பிடித்தது. விலங்கு அவரை முழுவதுமாக விழுங்கும் முன், அருகில் நின்ற கிறிஸ்பாஸ் பகோன்சா, என்ற நபர் அதன் மீது கற்களை வீசத் தொடங்கினார். எனவே சிறுவனை மீண்டும் வெளியில் துப்பியதாக கேபிடல் எஃப்எம் உகாண்டா மேலும் கூறியது.
சிறுவனின் பெயர் இகா பால் என அடையாளம் காணப்பட்ட போலிசார், அந்த மிருகம் சிறுவனின் தலையை பிடித்து, உடலின் பாதி பகுதியை விழுங்கியதாக தெரிவித்தனர். சிறுவனின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மேலதிக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். "பாதிக்கப்பட்டவர் உடனடியாக அருகிலுள்ள கிளினிக்கிற்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார், கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ப்வேரா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவர் முழுமையாக குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார், வெறிநாய்க்கடிக்கான தடுப்பூசியைப் பெற்ற பிறகு, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என உகாண்டா காவல்துறை ஒரு செய்திக்குறிப்பில் மேலும் கூறியது.
எவ்வாறாயினும், ஏரிகள் மற்றும் வனவிலங்கு மையங்கள் போன்ற விலங்குகள் சரணாலயங்களுக்கு அருகில் தங்கியிருக்கும் பெற்றோரை, முதலைகள் மற்றும் நீர்யானைகள் போன்ற விலங்குகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை செய்தித் தொடர்பாளர் எச்சரித்துள்ளார்.
மேலும் படிக்க | உண்மை காதலுக்கு வயதில்லை... 52 வயது பெண்மணியை மணந்த 21 வயது இளைஞன்!
நீர்யானைகள், தாவரங்களை உண்ணும் விலங்குகளாக இருந்தாலும், அச்சுறுத்தப்படும்போது மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். அவை படகுகளை தாக்கும் சம்பவங்களும் நடந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு, போட்ஸ்வானாவில் உள்ள செலிண்டா ரிசர்வ் ஸ்பில்வேயில் ஆற்றைக் கடக்க முயன்ற மூன்று சிங்கங்களை கோபமான நீர்யானை தாக்கியது. தி கிரேட் ப்ளைன்ஸ் கன்சர்வேஷன் இந்த சம்பவத்தின் வீடியோவை யூடியூப்பில் பகிர்ந்து அதை "மறக்க முடியாத தருணம்" என்று குறிப்பிட்டது.
நீர்யானை எனப்படும் ஹிப்போ தாக்குதல்களால் ஆப்பிரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 500 பேர் இறப்பதாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகமான எண்ணிக்கையாகும். பூமியில் உள்ள மற்ற எல்லா விலங்குகள் தாக்குதல்களாலும் இறக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. உலகின் மிகக் கொடிய நில விலங்குகளில் நீர்யானைகளும் ஒன்று என கூறப்படுகிறது.
மேலும் படிக்க | நண்பேண்டா... மானுக்கு ‘கிளை’ கொடுத்த குரங்கு... இணையவாசிகள் மனம் கவர்ந்த வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ