கால்பந்து போல் இனி கிரிக்கெட் போட்டியிலும் அரை டவுசர்?...

இளைஞர்களுக்கு பிடித்த இரண்டு விஷயங்களாக கிரிக்கெட் மற்றும் சமூக ஊடகங்கள் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் இணைத்து கிரிக்கெட் வரலாற்றியில் புதிய அத்தியாயம் எழுதவுள்ளது ICC!

Last Updated : Apr 1, 2019, 05:59 PM IST
கால்பந்து போல் இனி கிரிக்கெட் போட்டியிலும் அரை டவுசர்?... title=

இளைஞர்களுக்கு பிடித்த இரண்டு விஷயங்களாக கிரிக்கெட் மற்றும் சமூக ஊடகங்கள் இருக்கும் நிலையில் இந்த இரண்டையும் இணைத்து கிரிக்கெட் வரலாற்றியில் புதிய அத்தியாயம் எழுதவுள்ளது ICC!

கிரிக்கெட் விளையாட்டின் மீதான இளைஞர்களின் மோகத்தை கருத்தில் கொண்டு பல புதிய நடைமுறைகளை வரும் டெஸ்ட் கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகள் முதல் அறிமுகம் செய்யவுள்ளது ICC.

டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளானது இந்தாண்டு ஜூலை மாதம் துவங்கி வரும் 2021-ஆம் ஆண்டு வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் பார்வையாளர்களின் பங்கு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது ICC. அந்த வகையில் வரும் டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியின் முதல் போட்டியாளர்கள் தங்கள் பெயர்களுடன் தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்க கணக்கின் பெயரையும் கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

அதே வேலையில் கிரிக்கெட் போட்டியில் தற்போது நடைமுறையில் இருந்து வரும் நாணய டாஸ் முறைக்கு பதிலாக ட்விட்டர் வாக்கெடுப்பு மூலம் போட்டி நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த முறை மூலம் பார்வையாளர்கள் எந்த அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும் என தீர்மானிக்கலாம் என தெரிகிறது. பார்வையாளர்களுக்கு ICC அளித்துள்ள இந்த வசதியை மேலும் விரிவுபடுத்தும் விதமாக தங்களுக்கு விருப்பமான வீரர்கள் களத்தில் எப்படி விளையாட வேண்டும் என்பதையும் தீர்மானிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதாவது வெளியிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் போட்டியாளர்கள் கால்பந்து வீரர்கள் போல் அரைகால் சட்டை அணிந்து விளையாடலாம் எனவும் ICC தெரிவித்துள்ளது.

தொலைகாட்சியில் ஒளிப்பரப்பாகும் போட்டிகளை மேலும் சுவாரசியம் செய்ய, கிரிக்கெட் போட்டி வர்னணையாளர்கள் வீரர்களுக்கு பின் இருந்து போட்டியை பற்றி பேசுவது போல் தொலாக்காட்சிகள் ஓளிப்பரப்பலாம் எனவும் ICC தெரிவித்துள்ளது.

அதேப்போல் இரவு-பகல் ஆட்டமாக நடைபெறும் டெஸ்ட் போட்டிகளின் போது, இரவு நேரத்தில் அடிக்கப்படும் சிக்ஸர்கள் மற்றும் போர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாக கணக்கிடப்படும் எனவும் ICC தெரிவித்துள்ளது.

இத்துனை அறிவிப்புகளையும் கேட்டு, உண்மை தானா என வியப்பதற்குள் ஒரு நிமிடம் உங்கள் நாள்காட்டியை பாருங்கள். இன்று ஏப்ரல் 1(முட்டாள்கள் தினம்). அதிரவைக்கும் அறிவிப்புகள் மூலம் தனது வித்தியாசமான பானியில் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரையும் முட்டாளாக்கியுள்ளது ICC. 

Trending News