தமிழ் மண்ணு என்னை வைக்கணும் சிங்கமுன்னு: ஹர்பஜன் சிங்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ள ஹர்பஜன் சிங் தமிழில் ட்விட் செய்துள்ளார்.

Last Updated : Jan 27, 2018, 04:24 PM IST
தமிழ் மண்ணு என்னை வைக்கணும் சிங்கமுன்னு: ஹர்பஜன் சிங்! title=

பத்து ஆண்டுகள் கழித்து ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் பெங்களுரில் இன்று முதல்நாள் சுற்று ஏலம் நடைபெற்று வருகிறது.  

இதில் அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. சென்னை அணியில் தோனி, ரெய்னா, ஜடேஜா தக்கவைக்கப்பட்ட நிலையில் மற்ற வீரர்களுக்கான ஏலத்தில் சென்னை அணி பங்கேற்றது. 

அஸ்வினை ஏலத்தில் எடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் அவரை எடுக்க சென்னை அணி ஆர்வம் காட்டவில்லை. மாறாக அனுபவ சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

இதையடுத்து, ஹர்பஜன் சிங் ட்விட்டரில் தமிழில் தமிழில் தனது மகிழ்சியை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டரில்; "வணக்கம் தமிழ்நாடு உங்ககூட இனி கிரிக்கெட் ஆட போறது ரொம்ப சந்தோஷம் உங்க மண்ணு இனி என்னை வைக்கணும் சிங்க முன்னு" என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Trending News