புதுவித அலங்காரப் பொருள்! எச்சில் சிகையலங்காரம்! வைரலாகும் வீடியோ

பிரபல சிகையலங்கார நிபுணரின் அருவெறுக்கத்தக்க செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படலாம்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jan 7, 2022, 01:28 PM IST
  • அலங்காரம் அழகுக்கானது ஆனால் அருவெறுப்பூட்டும் அலங்காரம் இது
  • அலங்காரம் செய்வதற்காக சிறை செல்லவும் வாய்ப்பு
  • அலங்கார வீடியோவும், மன்னிப்பு வீடியோவும் வைரல்
புதுவித அலங்காரப் பொருள்! எச்சில் சிகையலங்காரம்! வைரலாகும் வீடியோ title=

புதுடெல்லி: சமூக ஊடகங்களில் பல்வேறு விதமான வீடியோக்களை பார்த்திருக்கலாம். ஆனால் இந்த வீடியோ மிகவும் அருவெறுக்கத்தக்கதாக இருக்கிறது. இந்த வீடியோவில் தவறு செய்பவர் மிகவும் பிரபலமானவர். ஊரறிந்த பிரபலம் சிறைக்குள் முடங்கும் அபாயத்தை ஏற்படுத்திய வீடியோ இது.

பிரபல சிகையலங்கார நிபுணரின் அருவெறுக்கத்தக்க செயல் சமூக ஊடகங்களில் வைரலாகிறது. அவர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்ற கோரிக்கைகளும் வலுக்கின்றன.

பொது நிகழ்ச்சி ஒன்றில், பெண் ஒருவரின் தலைமுடியில் எச்சில் துப்பியது தொடர்பாக பிரபல சிகை அலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் சர்ச்சையில் சிக்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. 

மேடை நாகரீகமற்ற இந்த செயலுக்காக சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் சிகையலங்கார நிபுணரை வறுத்தெடுக்கின்றனர்.

வீடியோவை பார்த்த தேசிய மகளிர் ஆணையம், அதிர்ச்சியடைந்தது. அதையடுத்து, இந்த  வீடியோவின் (Viral Video) உண்மைத்தன்மையை விசாரிக்க உத்தரபிரதேச காவல்துறையிடம் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

"இந்தச் சம்பவத்தை ஆணையம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டதுடன், இதை மிகக் கடுமையான வார்த்தைகளில் கண்டிக்கிறது. இந்த வைரலான வீடியோவின் உண்மைத்தன்மையை, சட்டப்படி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மகளிர் ஆணையம் தெரிவித்துள்ளது. 

ALSO READ | சுறாவின் காதல் காயமா? இல்லை மோதல் வடுவா?

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய வழிகாட்டுதல்கள், கோவிட் தொற்றுநோயைத் தொடர்ந்து பொது இடங்களில் எச்சில் துப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்" என்று NCW மாநில காவல்துறைக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

பிரபல சிகையலங்கார நிபுணர் ஜாவேத் ஹபீப் ஒரு பெண்ணின் தலைமுடியை ஸ்டைல் ​​செய்யும் போது அவரது தலையில் எச்சில் துப்புவது போன்ற வீடியோ பலரை எரிச்சலூட்டியது.

தற்போது, ஜாவேத் ஹபீப், ஏன் தான் அப்படி செய்தேன் என்று விளக்கம் தெரிவித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். ஜாவேத் ஹபீப்பின் 'மன்னிக்கவும்' வீடியோவும் (Viral Video) தற்போது வைரலாகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jawed Habib (@jh_hairexpert)

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் ஹபீப் நடத்தி வரும் பயிற்சி வகுப்பின்போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 இன் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள நிலையில், சிகையலங்கார நிபுணர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால், வைரல் வீடியோவால் சிறைக்கு சென்ற பிரபலம் என்றும் இவர் சமூக ஊடகங்களில் வைரலாவார் என்பது நிச்சயம்.

ALSO READ | கள்ளக்காதலியை ஹோட்டலுக்கு அழைத்து சென்ற கணவன்; மனைவி செய்த அதிரடி 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News