புதுடெல்லி: இணையம் என்பது விசித்திரமான உள்ளடக்கங்களைக் கொண்டதாக உள்ளது. இது, சில சமயங்களில் ஆச்சரியங்களையும் சில சமயங்களில் அதிர்ச்சிகளையும் கொடுத்தாலும் சில சமயங்களில் வாழ்க்கைக்குத் தேவையான விஷயங்களையும், எப்படி இருக்க வேண்டும், எப்படியிருக்கக்கூடாது என்பது போன்ற அறிவுறுத்தல்களையும் கொடுக்கிறது. சமூக வலைதளத்தில் பகிரப்படும் வீடியோக்கள் தகவல்களின் களஞ்சியங்களாக இருப்பதால், தெரிந்துக் கொள்ள வேண்டிய பல விஷயங்களை நாம் தெரிந்துக் கொள்ள முடிகிறது.
பறவைகளுக்கும் குறும்பும், குசும்பும் உண்டு. பறவைகளுக்கு இடையில் அவ்வப்போது ஏற்படும் மோதல்களும், அன்பும் நமக்கு வேடிக்கையாக இருக்கின்றன. அப்படிப்பட ஒரு வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கிறது. அண்மையில் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் இந்த காணொளியில் பறவைகளின் விளையாட்டை பார்த்து மகிழலாம்.
உண்மையில், இருவேறு பறவைகளுக்கு இடையில் நடக்கும் போட்டியும், பொறாமையும் இயல்பாக இருந்தாலும், ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடியவை என்பதை உணர்ந்தால் பதற்றமாக இருக்கிறது. ஆனால், இந்த வீடியோ, ஜாலியா பார்த்து ரசிப்பதற்கான வீடியோ தான். இதை பார்த்து ரிலாக்ஸ் பண்ணலாம்.
வைரலாகும் வீடியோவை இங்கே காணலாம்
வானத்தில் பறக்கும் பறவையை துரத்தும் பென்குயின்களின் வாத்து நடை சிரிக்க வைத்தாலும், பறவை, நீர் நிலையைத் தாண்டி பறந்ததும், சிறிதும் தாமதிக்காமல் அதனை துரத்த, தண்ணீருக்குள் குதித்து நீச்சலடித்துக் கொண்டே அடுத்த கரைக்கு செல்லும் பென்குயினின் துரிதமான செயல்பாடு பிரமிக்க வைக்கிறது.
ஆனால், விட்டேனா பார் என்று அந்தப் பறவை, பென்குயினைப் பார்த்ததும், மீண்டும் கரையைத் தாண்டி பறந்து சென்றுவிடுகிறது. உனக்கு அவ்வளவு கொழுப்பா, உன்னை விடமாட்டேன் என்று சொல்வது போல, மீண்டும் நீருக்குள் குதித்து பறவையை துரத்துகிறது பென்குயின்.
பென்குயினின் துரத்தலும், அதை ஈஸியாக சமாளிக்கும் பறவையும் நமக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுக்கின்றன. அதில் ஒன்று தான், மனசுக்கு தோணுறதை செய்யு மச்சி! என்ற ஆகச் சிறந்த தத்துவம்....
மேலும் படிக்க | கிளைமேக்ஸில் என்ட்ரியாகி கடத்தல்காரர்களுக்கு செக் வைத்த நாய் வீடியோ வைரல்
உலகில் வாழும் உயிரினங்களில், மனிதனைத் தவிர, வேறு எதற்கு என்ன திறமை இருக்கிறது என்பது பற்றி நாம் பெரிய அளவில் கவலை கொள்வதில்லை. ஆனால், பறவைகளும், விலங்குகளும் மனிதர்களைப் போலவே தங்கள் குடும்பத்தை பாதுகாப்பவை. கோபம் வந்தால் சண்டை போடுபவை.
தனது உணவுக்காக வேட்டையாடும் விலங்குகள், பசியாறிவிட்டால், ஜாலியாக வாழ்க்கையை வாழ்கின்றன. மனிதன் மட்டும்தான் அதற்கு விதிவிலக்கு.
(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ