சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் "பிகில்" விநாயகர்

"பிகில்" படத்தில் விஜய் இருக்கும் காஸ்ட்யூமில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலை சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் வைரலாகி வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 2, 2019, 05:29 PM IST
சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகும் "பிகில்" விநாயகர் title=

இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்று விஜய்யின் பிகில். அட்லியுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள விஜய், இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக வித்தியாசமான ஒரு கதைக்களத்தில் விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.

வரும் தீபாவளிக்கு ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் முதல் பாடலான "சிங்கப் பெண்ணே" பாடல் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இதன்பின்னர் நேற்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் டைட்டில் சாங்கான "வெறித்தனம்" (#Verithanam) பாடல் வெளியானது. இந்தப் பாடலை முதன்முறையாக ஏ ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருக்கின்றார். இந்தப் பாடலின் ப்ரோமோ வீடியோவை பிகில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டவுடனே ஆர்.டியை தெறிக்க விட்டு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 

தற்போது விநாயகர் சதுர்த்தி பண்டிகை காலம் என்பதால் விதவிதமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. அதில் "பிகில்" படத்தில் விஜய் இருக்கும் காஸ்ட்யூமில் விநாயகர் சிலையை வடிவமைத்துள்ளனர். இதை விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகிறார்கள்.

Trending News