ச்சூச்சூ போகறதுலயும் ஸ்டைலா? என்ன கண்றாவிடா இது? ரசிக்க வைக்கும் குறும்பு வீடியோ

Dog Style Video Trending: ஸ்டைலா நடக்க பிடிக்கும்னா இப்படியெல்லாமா வம்பு பன்ணுவாங்க? ஆனாலும் ஜாலியாத்தான் இருக்கு... ரசிக்க வைக்கும் குறும்பு வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 20, 2023, 03:14 PM IST
  • இரண்டு காலில் நடக்கும் நாய்க்குட்டி வீடியோ வைரல்
  • சிறுநீர் கழிப்பதிலும் ஸ்டைல் காட்டும் நாய்
  • எதுக்கெல்லாம் போட்டி போடறது? வீடியோ வைரல்
ச்சூச்சூ போகறதுலயும் ஸ்டைலா? என்ன கண்றாவிடா இது? ரசிக்க வைக்கும் குறும்பு வீடியோ title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய தொடர்புகள் உலகின் போக்கையே மாற்றிவிட்டன. கைக்குள் உலகை அடக்கிவிட்ட ஸ்மார்ட்போன்கலின் வரவு, உலகின் பல்வேறு இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளை நம் கண் முன்னே கொண்டு வந்து கொட்டுகிறது. சமூக ஊடக உலகம், பல வித அற்புதங்களை கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாக இருக்கிறது. இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது.

நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் பொழுதுப்போக்கு விஷயங்களில் முதலிடம் பிடித்துவிட்டது. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் பார்த்து வியக்கிறோம்.

சமூக ஊடகங்களில் பல வீடியோக்களை பார்க்கிறோம். அவற்றில் சில வீடியோக்கள் மிகவும் வித்தியாசமாக மிகவும் ஆச்சரியம் அளிக்கும் வகையிலும் இருக்கின்றன. இணையத்தில் பகிரப்பட்ட சில வீடியோக்கள் வைரலவதற்கு காரணம் என்னவென்றால்,அ வை வித்தியாசமான அல்லது குறும்பு வீடியோவாக இருக்கும்.

மேலும் படிக்க | உணவுக்காக தீனி தேடாமல் அழகுக்காக உணவு சேர்க்கும் க்யூட் பறவை

நாய், பூனை, பாம்பு, புலி, சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோகளை பார்த்து ரசிக்க பலரும் விரும்புகின்றனர். அதில் நாய்க்குட்டியின் போட்டி போடும் வீடியோ பார்த்தாலே சிரிப்பை வரவழைக்கிறது.  

குறும்பு செய்யும் விலங்குகள் மற்றும் குழந்தைகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படும்போது இணையவாசிகளின் உள்ளங்களை கொள்ளை கொள்கிறது. தற்போதும் அப்படி ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இரு நாய்கள் உச்சா போவது தான் விஷயம் என்றால், அதிலென்ன குறும்பு என்று கேட்கிறீர்களா? பார்த்தால் உங்களுக்கே புரியும்...

இந்த நாய்க்குட்டியின் குறும்பைப் பார்த்தால் சிரிப்பு வரவில்லையா? ஒரு நாய், உட்கார்ந்த வண்ணம் சிறுநீர்  கழித்தால், அதைப் பார்த்து தானும் அதே வேலையை செய்யும் மற்றொரு நாய்க்குட்டி, அதையே ஸ்டைலாக செய்வதுடன், இரண்டு கால்களைத் தூக்கி வித்தை காட்டுகிறது.

மேலும் படிக்க | Viral Video: அசந்த நேரம் பார்த்து ஐஸ்கிரீமை சுவைத்த கில்லாடி பறவை!

சிறுநீர் கழிப்பதிலும் ஸ்டைலா என்று பல நெட்டிசன்களும் இந்த குரங்கைப் பார்த்து அதிசயிக்கின்றனர். இந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் வந்து குவிகின்றன. பல இணையவாசிகள் இந்த வீடியோவிற்கு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். பலர் நாயின் ஸ்டைலை பாராட்டி, இது தான் போட்டி என்று கலாய்க்கின்றனர்.  

இப்படி பலரையும் வசீகரிக்கும் வைரல் வீடியோக்கள் தொடர்ந்து ஆன்லைன் பார்வையாளர்களை மகிழ்விக்கின்றன. அதே போல, ஒரு குறிப்பிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானால் அதைத் தொடர்ந்து பல வீடியோக்கள் அதைப்போலவே வெளியானால், அதை வைரல் வீடியோ ரசிகர்கள் நிராகரித்து விடுகின்றனர்.

மேலும் படிக்க | கன்னாபின்னானு சண்டை போட்ட நாயும் குரங்கும்: கதிகலங்கி பார்த்த நெட்டிசன்ஸ், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News