யோகி பாபு-வின் 'கூர்க்கா' திரைப்படத்தின் Firstlook வெளியானது!

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் 'கூர்க்கா' திரைப்படத்தின் Firstlook போஸ்டர் வெளியாகியுள்ளது!

Last Updated : Sep 15, 2018, 06:26 PM IST
யோகி பாபு-வின் 'கூர்க்கா' திரைப்படத்தின் Firstlook வெளியானது! title=

நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிப்பில் உருவாகிவரும் 'கூர்க்கா' திரைப்படத்தின் Firstlook போஸ்டர் வெளியாகியுள்ளது!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவ நகைச்சுவையால் முன்னணி காமெடியனாகத் திகழ்ந்து வருபவர் யோகி பாபு. தற்போது விஜய்யுடன் ‘சர்கார்’, அஜித்துடன் ‘விஸ்வாசம்’, ‘100% காதல்’, ‘குப்பத்து ராஜா’, ‘பரியேறும் பெருமாள்’  என பல படங்களை தன் கைவசம் வைத்துள்ள இவர் தற்போது 'கூர்க்கா' என்னும் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.

‘டார்லிங்’, ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ திரைப்படங்களை இயக்கிய சாம் ஆண்டன் இத்திரைப்படத்தினை இயக்குகிறார். படத்தொகுப்பு பொறுப்பினை ரூபன் ஏற்றுள்ளார்.

முன்னதாக யோகி பாபு வெளியிட்டிருந்த வீடியோ ஒன்றில் அவர் தெரிவித்ததன் படி இப்படத்தின் கதையானது.. வெளி நாட்டவர் ஒருவருக்கும், நாய்க்கும் இடையே நடக்கும் சம்பவத்தை மையாமாக கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் யோகிபாபு கூர்க்கா வேடத்தில் நடிப்பதாக அவர் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்படத்தின் Firstlook போஸ்டரினை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்!

Trending News