ஒட்டகச்சிவிங்கிகளின் வேற லெவல் சண்டை: வைரலாகும் வீடியோ

Viral Animal Video: காணக்கிடைக்காத வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வைரல் ஆகி வருகிறது. இது ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை வீடியோ!!

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 16, 2022, 01:21 PM IST
  • ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டையை பார்த்ததுண்டா?
  • விசாலமான ஒட்டகச்சிவிங்கிகள் ஒய்யாரமாய் நின்றுகொண்டு சலனமில்லாமல் சண்டியிடுவது பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது.
  • பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை அமைதியாக இருந்தாலும், அதில் ஆக்கிரோஷத்தை காண முடிகின்றது.
ஒட்டகச்சிவிங்கிகளின் வேற லெவல் சண்டை: வைரலாகும் வீடியோ title=

ஒட்டகச்சிவிங்கி சண்டை வீடியோ: பல்வேறு விலங்குகளின் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன. ஒட்டகச்சிவிங்கிகளின் வீடியோக்கள் அரிதாகவே காணப்படுகின்றன.  ஆனால் ஒட்டகச்சிவிங்கிகளின் வீடியோக்கள் போஸ்ட் செய்யப்பட்டால் அவை உடனேயே வைரலாகி விடுகின்றன. ஒட்டகச்சிவிங்கிகள் நீண்ட கழுத்து, நீண்ட கால்கள் மற்றும் நீண்ட நாக்கிற்கு பெயர் பெற்றவை. ஒட்டகச்சிவிங்கி மிகவும் கூச்ச சுபாவமுடையது என்றாலும், அவற்றை கிண்டல் செய்தால், அவை மிகவும் ஆபத்தானவையாகிவிடும். தங்களை வேட்டையாடும் விலங்குகளிடமிருந்து தப்பிக்க இவை தங்கள் கால்களைப் பயன்படுத்துகிறது என்றும், இவை தங்கள் காலால் ஒரு அடி அடித்தால் சிங்கம் போன்ற விலங்குகளையும் கொல்ல முடியும் என்றும் கூறப்படுகிறது.இப்போது இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் சம்பந்தப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒட்டகச்சிவிங்கிகளுக்கு இடையே சண்டை

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், வனப்பகுதியை கடந்து செல்லும் சாலையில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் நேருக்கு நேர் வருவதை காண முடிகிறது. பார்த்துக்கொண்டிருக்கும் போதே இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் சண்டை இடத் தொடங்குகின்றன. 

மேலும் படிக்க | ஷூவில் ஒரு 'ஷ்ஷ்...' சத்தம்: பேசிப்பேசியே பாம்பை படிய வைத்த பெண்

விடியோவில் இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் கழுத்து முகம் கொண்டு தீவிர சண்டையில் ஈடுபடுவதை காண முடிகின்றது. விசாலமான ஒட்டகச்சிவிங்கிகள் ஒய்யாரமாய் நின்றுகொண்டு சலனமில்லாமல் சண்டியிடுவது பார்ப்பதற்கு பிரமிப்பாக உள்ளது. பார்ப்பதற்கு பிரம்மாண்டமாக இருக்கும் ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை அமைதியாக இருந்தாலும், அதில் ஆக்கிரோஷத்தை காண முடிகின்றது. 

வீடியோவில், அந்த வழியில் வனப்பிரதேசத்தை சுற்றி பார்க்க வந்தவர்கள் ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டையை பார்த்து பிரமிப்பதை அவர்கள் எழுப்பும் குரல்களின் மூலம் தெரிந்துகொள்ள முடிகின்றது. காண்பதற்கு மிக அரிதான ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை அவர்களை வியக்க பைக்கிறது.

காணக்கிடைக்காத ஒட்டகச்சிவிங்கிகளின் சண்டை வீடியோவை இங்கே காணலாம்: 

நீண்ட நேரம் தொடர்ந்த  சண்டை

இரண்டு ஒட்டகச்சிவிங்கிகளும் நீண்ட நேரம் சண்டை போடுவதை வீடியோவில் காண முடிகின்றது. சாலையின் நடுவில் நின்றுகொண்டு இரு ஒட்டகச்சிவிங்கிகளும் ஒன்றுக்கு ஒன்று சளைத்ததல்ல என்பதை நிரூபிப்பதில் கவனமாக இருப்பதை நம்மால் யூகிக்க முடிகின்றது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ waowafrica என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு ஆரோக்கியமான ஒட்டகச்சிவிங்கியின் நீளம் 18 அடி வரை இருக்கும் என்பது கூடுதல் தகவல். ஒட்டகச்சிவிங்கிகளின் இந்த சண்டை வீடியோவை இணையவாசிகள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள். பல வித கமெண்டுகளையும் அள்ளி வீசி வருகிறார்கள்.

மேலும் படிக்க  | வம்பிழுத்து மாட்டிக்கொண்ட பூனை: வைரலாகும் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News