கீழே விழப்போன மூதாட்டிக்கு சேர் கொடுத்த செல்ல நாய் - வைரல் வீடியோ

மூதாட்டி ஒருவர் கீழே உட்காரும்போது அந்த இடத்தில் சேர் இல்லாததைப் பார்த்து செல்ல நாய்க்குட்டி ஓடி வந்து அருகில் இருந்த நாற்காலியை தள்ளி வைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 12, 2023, 10:42 PM IST
கீழே விழப்போன மூதாட்டிக்கு சேர் கொடுத்த செல்ல நாய் - வைரல் வீடியோ title=

வயதான மூதாட்டி  அமரும் வகையில் நாய் ஒன்று சிறிய  இருக்கை (ஸ்டூல்) எடுத்து சென்று தரும் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பூனையும், நாயும் வளர்ப்புப் பிராணிகளில் முன்னணி வகித்தாலும், நாய்க்கு இருக்கும் மதிப்பே தனிதான். மற்ற பிராணிகளைவிட மனிதனின் நம்பிக்கைக்கு உரிய உயிரினமாக நாய் இருந்து வருகிறது. நாய்கள் வீட்டில் இருந்தால் பாதுகாப்பாக இருக்கலாம். 

மேலும் படிக்க | வேட்டைக்கு வந்த கருநாகத்தை தலையில் அடித்து கதறவிட்ட பூனை: வீடியோ வைரல்

குறிப்பாக திருட்டு மற்றும் மற்ற விலங்குகளிடம் இருந்து நம்மை பாதுகாப்பதில் நாய்கள் முக்கிய பங்காற்றுகின்றன. சில நேரங்களில் எஜமானர்களுக்காக வனவிலங்குகளுடன் சண்டையிட்டு நாய்கள் உயிரிழப்பதும் உண்டு. அது கிடைக்கும் வாய்ப்பில் நாய் நன்றியுள்ளது என்ற கூற்றை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பான ஆயிரக்கணக்கான  வீடியோக்கள் இணையத்தில் உலா வருகின்றன. 

அந்த வகையில் peoplesdaily என்ற யூடியூப் பக்கத்தில் அழகான வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில் வயதான மூதாட்டிக்கு நாய் ஒன்று இருக்கை ஒன்றை நகர்த்திக்  கொண்டுவந்து தருகிறது. பின்னர் அந்த இருக்கையில் மூதாட்டி அமர்ந்தவுடன் அவரின்  மடியில்  செல்லமாக கால் போட்டு அமர்ந்து கொள்கிறது அந்த செல்ல நாய். இந்த வீடியோ வெறும் 45 விநாடிகள் தான். ஆனால் வீடியோ வெளியிட்ட இரு நாட்களில் அதிகமான லைக்குகளை அள்ளிக்குவித்து வருகிறது.

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News