முதலையிடம் வசமாய் மாட்டிக்கொண்ட நாய்..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல்

Crocodile Attack Video: தண்ணீரில் மறைந்திருந்த முதலை நாயை பார்த்ததும் தாக்க முயற்சி செய்வதை காணொளியில் காணலாம், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 16, 2023, 03:01 PM IST
  • சமூக ஊடகங்களில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
  • விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.
  • தற்போது அதிர்ச்சியை அளிக்கும் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது.
முதலையிடம் வசமாய் மாட்டிக்கொண்ட நாய்..அப்புறம் என்னாச்சி: வீடியோ வைரல் title=

வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

சமூக ஊடகங்களில் பெரும்பாலும் சிங்கம், சிறுத்தை, யானை, முதலை தொடர்பான வீடியோக்கள் அதிகம் பதிவிடப்படுகின்றன. இந்த வீடியோக்களில் சில முற்றிலும் அதிர்ச்சியளிக்கின்றன. நம்மால் நம்ப முடியாத பல விஷயங்களை நாம் இந்த வீடியோக்களில் காண்கிறோம். தற்போது அதிர்ச்சியை அளிக்கும் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அதில் ஒரு அதிசயமான காட்சி காணப்படுகிறது. இந்த வீடியோ முதலை மற்றும் நாய் தொடர்புடையது.

மேலும் படிக்க | Viral Video:பல ஆண்டுகளாக எரியும் ‘நெருப்பு மலை’! அணைக்க முடியாமல் நீடிக்கும் மர்மம்!

பொதுவாக முதலை மிகவும் ஆக்கிரோஷமான மிருகமாக கருதப்படுகின்றது. அதன் பிடியில் சிக்கினால் யாராலும் மீள முடியாது. முதலை இரை தேடி நீருக்கடியில் மறைந்திருப்பதை காணலாம். சிறிது நேரம் கழித்து, ஒரு நாய் தண்ணீரில் குதிக்கிறது. அப்போது அங்கு மறைந்திருந்த முதலை உடனடியாக அந்த நாயை தாக்க முயற்சிக்கிறது. நாய் அருகில் வந்தவுடன் ராட்சத முதலை வாயைத் திறந்து நாயைத் தாக்கியதைக் காணலாம். ஆச்சரியம் என்னவென்றால், அதிர்ஷ்டவசமாக முதலையின் தாடையில் இருந்து நாய் மீண்டும் மீண்டும் தப்பியது தான். ஆனால் அடுத்த செகண்ட் என்ன நடந்தது என்பதை வீடியோவில் கண்டால் நீங்கள் அதிர்ச்சியடைந்துவிடுவீர்கள்.

முதலையை ஏமாற்றிய நாயின் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

முதலை மற்றும் நாயின் இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களின் பல்வேறு தளங்களில் பகிரப்பட்டுள்ளது. காட்டு விலங்குகள் தொடர்பான இந்த வீடியோ beautiful_post_4uandwild_animal_pix என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு ஏகப்பட்ட லைக்குகளும் வியூஸ்களும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.

மேலும் படிக்க | பறவையை பதம் பார்த்த பச்சை நிறப் பாம்பு; கதி கலங்க வைக்கும் வைரல் வீடியோ​

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News