நெருப்பை பார்த்து பதறும் நாய் - வைரல் வீடியோ

லைட்டரில் தோன்றும் நெருப்பை பார்த்து நாய் ஒன்று பதறும் க்யூட் வீடியோ நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 12, 2022, 04:13 PM IST
  • நெருப்பைப் பார்த்து பதறும் நாய்க்குட்டி
  • இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர்.
நெருப்பை பார்த்து பதறும் நாய் - வைரல் வீடியோ title=

வீட்டில் வளர்க்கப்படும் செல்ல பிராணிகளின் நடவடிக்கைகள் அனைத்தும் க்யூட் ரகத்தைச் சேர்ந்தது. மனிதர்களோடு மனிதர்களாக ஒன்றி அவை செய்யும் செயல்களும், கொடுக்கும் முக பாவனைகளும் ரசிக்கும்படியாக இருக்கும்.

அதுமட்டுமின்றி தன் உரிமையாளருடன் உரிமையோடு சண்டை போடுவது, உடனடியாக சமாதானம் ஆகாதது, வீட்டில் உள்ளவர்களுடன் அமர்ந்து டிவி பார்ப்பது என வீட்டில் ஒருவராகவே செல்ல பிராணிகள் மாறிவிடும்.

மேலும் படிக்க | தொட்டு தொட்டு விளையாடுவோமா: சிங்கத்துடன் விளையாடும் குழந்தை, மயங்கிய இணையவாசிகள்

மேலும் அந்த வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால் குழந்தைகளை பாதுகாத்து சிறு குழந்தையாகவே மாறி விளையாடும். அந்த வீடியோக்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பலரை கவரும்.

முக்கியமாக மனிதர்களுக்கு சாதாரணமாக தெரியும் செயல்கள் எல்லாம் செல்ல பிராணிகளுக்கு அசாதாரணமாக தெரியும். உதாரணத்திற்கு கண்ணாடியில் தன்னை தானே பார்த்துக்கொண்டு மிரட்சியுடன் நிற்கும்.

இதுதொடர்பான வீடியோக்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அந்த வகையில் தற்போது நாய் ஒன்றின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி நெட்டிசன்ஸை கவர்ந்துள்ளது.

மேலும் படிக்க | ஆட்டுக்குட்டியை அம்மாவிடம் சேர்த்துவைத்த கியூட் சிறுவன்: 'சோ ச்வீட்' என உருகும் நெட்டிசன்கள்

அந்த வீடியோவில் ஒருவர் சிகரெட் பற்ற வைக்கும் லைட்டரிலிருந்து நெருப்பை வரவைத்து தனது விரல்களை கொண்டு அணைத்துவிடுகிறார். அதனை பார்க்கும் நாயானது பதறி துள்ளி மிரட்சியுடன் பார்க்கிறது.

இதேபோல் இரண்டு முறை அவர் அப்படி செய்ய நாயும் பதறி துள்ளி மிரட்சியடைகிறது. மீண்டும் ஒருமுறை அவர் நெருப்பை லைட்டரிலிருந்து வரவைத்தபோது நாய் பதறியடித்து அந்த இடத்திலிருந்து ஓடிவிடுகிறது. 

 

இந்த வீடியோவை பார்த்த பலரும் நாயின் க்யூட்னெஸ்ஸை ரசித்து புகழ்ந்து வீடியோவினை பகிர்ந்து வைரலாக்கிவருகின்றனர். இதுவரை இந்த வீடியோவானது 3,000க்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்று, 450 ரீட்விட்டுகளைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News